முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபிஷேக் குறித்து டி.வில்லியர்ஸ்

செவ்வாய்க்கிழமை, 7 அக்டோபர் 2025      விளையாட்டு
de-Villiers 2023 08 18

Source: provided

எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடரில் அசத்தப்போகும் வீரர்கள் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க வீரரான அபிஷேக் சர்மா ஆஸ்திரேலியா மைதானங்களில் அசத்துவார் என டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அபிஷேக் சர்மா தற்போது தனது வாழ்வின் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். டி20 போட்டிகளில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் ஆஸ்திரேலிய மைதானங்களிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆஸ்திரேலிய மைதானங்களில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால் அதனை அவர் விரும்பி விளையாடுவார். அதோடு ஆப் சைடு, லெக் சைடு என எந்த திசையிலும் அவரால் நன்றாக அடிக்க முடியும். அதனால் நிச்சயம் இந்த ஆஸ்திரேலியா மைதானங்களில் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இவ்வாறு அவர் கூறினார். 

__________________________________________________________________________________________________________

பாக்., வீராங்கனைக்கு எச்சரிக்கை

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொழும்பில் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சித்ரா அமின் 81 ரன் எடுத்தார். அவர் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பும் போது, ஆடுகளத்தில் பேட்டை ஓங்கி அடித்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர், வீராங்கனைகளின் நடத்தை விதியை மீறிய சித்ரா அமினுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், ஒரு தகுதி இழப்பு புள்ளியை தண்டனையாக விதித்தார்.

__________________________________________________________________________________________________________

ரஞ்சி: கர்நாடகா அணி அறிவிப்பு

இந்த சீசனுக்கான (2025-26) ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான கர்நாடகா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் கருன் நாயர், ஸ்ரேயாஸ் கோபா, வைஷாக் விஜயகுமார், அபினவ் மனோகர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சீனியர் வீரரான கே.எல்.ராகுலுக்கு அணியில் இடம்பெறவில்லை.

கர்நாடகா அணி விவரம்: மயங்க் அகர்வால் (கேப்டன்), கருண் நாயர், ஆர்.ஸ்மரன், கே.எல்.ஸ்ரீஜித் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் கோபால், வைஷாக் விஜயகுமார், வித்வத் கவேரப்பா, அபிலாஷ் ஷெட்டி, எம்.வெங்கடேஷ், நிகின் ஜோஸ், அபினவ் மனோகர், க்ருத்திக் கிருஷ்ணா (விக்கெட் கீப்பர்), கே.வி.அனீஷ், மோஷின் கான், ஷிகார் ஷெட்டி.

__________________________________________________________________________________________________________

வெஸ்ட் இண்டீஸ் வீரர் மரணம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான பெர்னார்ட் ஜூலியன் (வயது 75) உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் 1973 முதல் 1977-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக 24 டெஸ்ட் போட்டியில் ஆடி 2 சதம் உள்பட 866 ரன்னும், 50 விக்கெட்டும், 12 ஒருநாள் போட்டியில் ஆடி 86 ரன்னும், 18 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

பெர்னார்ட் ஜூலியன் 1975-ம் ஆண்டு நடந்த முதலாவது ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணியில் முக்கிய பங்களிப்பை அளித்தார். அந்த உலகக் கோப்பை தொடரில் அவர் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 20 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 27 ரன் கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினார். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 26 ரன்னும் எடுத்தார். அவர் கவுண்டி போட்டியில் கென்ட் அணிக்காக விளையாடி இருக்கிறார். பெர்னார்ட் ஜூலியன் மறைவுக்கு வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து