முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடு: ஆர்.ஜே.டி. 135, காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டி

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2025      இந்தியா
Thasv-2025-08-10

Source: provided

புதுடெல்லி : பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடில் ஆர்.ஜே.டி. 135, காங். 61 இடங்களில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) 135, காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆள்கிறது. இதன் இரண்டு துணை முதல்வர்களுடன் முக்கிய கூட்டணியாக பாஜக உள்ளது. தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியாவின் உறுப்பினர்களுடன் மெகா கூட்டணி அமைந்துள்ளது. ஆர்.ஜே.டி. தலைமையிலான இந்த கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இருந்தது.

கடைசியாக நேற்று காலை தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலுவின் மகனான தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது பெயரை அறிவிக்க காங்கிரஸும் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மெகா கூட்டணி கட்சித் தலைவர்கள் வட்டாரத் தகவல்களின்படி,பீகாரின் முக்கிய எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி. அதிக இடங்களாக 135 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அடுத்ததாக, காங்கிரஸுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விகாஷீல் இன்சான்(விஐபி) 16, இடது சாரிகளுக்கு 29 முதல் 31 தொகுதிகளும் கிடைத்துள்ளன. இருப்பினும், மெகா கூட்டணியால் திட்டமிடப்பட்ட துணை முதல்வர்கள் குறித்து தற்போது எந்த அறிவிப்பும் வெளியாகாது என தெரிகிறது. இதனிடையே, துணை முதல்வர் வேட்பாளராக தனது பெயரை அறிவிக்க விஐபி (விகாஷீல் இன்சான்) கட்சித் தலைவர் முகேஷ் சாஹ்னி கோரிக்கை விடுத்துள்ளார்.

பீகாரில் கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலில், ஆர்.ஜே.டி. 144 இடங்களில் போட்டியிட்டு 75 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், இந்த முறை அந்தக் கட்சி குறைவான இடங்களில் போட்டியிடும் எனத் தெரிகிறது. கடந்த முறை காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டு மிகக்குறைந்ததாக 19 எம்எல்ஏ-க்களை பெற்றது. இதில் ராகுல் காந்தி உள்ளிட்டக் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யாதது அதன் காரணம் எனப் புகார் எழுந்தது. காங்கிரஸின் இந்த தவறான நடவடிக்கையால் தான் தலைவர் தேஜஸ்வி யாதவ்,பீகாரில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததாக ஆர்.ஜே.டி. கட்சியினர் புலம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து