முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்

புதன்கிழமை, 5 நவம்பர் 2025      உலகம்
Aftab-2025-11-05

சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார். இதையடுத்து, சின்சினாட்டி நகரின் மேயராக தொடர்ந்து இரண்டாவது முறையாக அஃப்தாப் (வயது 43) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சின்சினாட்டி மேயர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக வெற்றிபெற்ற அஃப்தாப் புரேவல், முதல் ஆசிய - அமெரிக்க மேயர் என்ற வரலாற்றை படைத்தார். 66 வாக்குகள் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக சுயேச்சை வேட்பாளராக சின்சினாட்டி மேயர் தேர்தலில் அஃப்தாப் புரேவல் களமிறங்கினார். இவரை எதிர்த்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை குடியரசுக் கட்சி களமிறக்கியது. (ஜே.டி. வான்ஸும் கோரி போமனும் ஒரே தந்தைக்கு பிறந்தவர்கள்)

இருப்பினும், மக்களின் பேராதரவால் இரண்டாவது முறையாக சின்சினாட்டி மேயராக அஃப்தாப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது, சுயேச்சையாக தேர்தலில் நின்றாலும் ஜனநாயகக் கட்சி அஃப்தாபுக்கு ஆதரவு அளித்தது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் தேவேந்தர் சிங் புரேவால் மற்றும் திபெத்திய அகதி ட்ரென்கோ என்பவருக்கு மகனாக 1982 ஆம் ஆண்டு பிறந்தவர் அஃப்தாப். சிறு வயது முதலே அரசியல் ஆர்வமுடையவராக இருந்த அஃப்தாப், 8ஆம் வகுப்பு பயிலும்போது மாணவர் தேர்தலில் வெற்றிபெற்றார்.

சின்சினாட்டி சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அஃப்தாப், 2008 ஆம் ஆண்டு வாஷிங்டனில் வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், ஓஹியோவில் அரசின் சிறப்பு உதவி வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 2018 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த அஃப்தாப், மாவட்ட தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு, குடியரசுக் கட்சி வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.

2021 மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயரை 66 சதவீத வாக்குகளுடன் தோற்கடித்து அஃப்தாப் வரலாறு படைத்தார். கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸை ஆதரிப்பதாக அஃப்தாப் அறிவித்திருந்தார். அஃப்தாப், விட்னி விடிஸ் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2025 ஆண்டின்படி, அஃப்தாபின் சொத்து மதிப்பு 10 லட்சம் அமெரிக்க டாலர் ஆகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து