முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு

புதன்கிழமை, 5 நவம்பர் 2025      தமிழகம்
Vijay 2025-03-28

Source: provided

சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில்   காலை த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 1,400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 

சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம். சொல்ல முடியாத அளவிற்கு வேதனையிலும் வலியிலும் இவ்வளவு நாள் நாம் இருந்தோம் அப்படிப்பட்ட இந்த சூழலில் நம்முடைய சொந்தங்களின் மனம்பற்றி இருக்க வேண்டியது நம் கடமை அதனால்தான் இவ்வளவு காலம் மௌனம் காத்து வந்தோம்.

அப்படி அமைதியாக இருந்த நேரத்தில் நம்மை பற்றி வன்ம அரசியல் வலைகள் ,அர்த்தமற்ற அவதூறுகள், என நம்மை சுற்றி பின்னப்பட்டது பரப்பப்பட்டது. இவற்றை அனைத்தையும் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணையோடு துடைத்து எறிய தான் போகிறோம்.ஆனால் அதற்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு உரைக்கு ஒரு நாகரீக பதிலடி கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அரசியல் செய்ய விருப்பம் இல்லை என அடிக்கடி சொல்கின்ற முதல்வர் நம்மை குறிப்பிட்டு பல்வேறு அவதூறுகளை பதிவு செய்வதன் வாயிலாக பெருந்தன்மையை பெயரளவில் பேசும் முதல்வர், தமிழக சட்டமன்றத்தில் பேசிய பேச்சுக்கள் எவ்வளவு வன்மத்தை கக்கி இருக்கிறார்கள் எனவும் எப்படிப்பட்ட அரசியல் என்று தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள். இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இல்லாத அதிக கட்டுப்பாடு நமக்கு கொடுக்கப்பட்டிருந்தது பிரச்சார நேரத்தில் பேருந்துகுள் மட்டும் தான் இருக்க வேண்டும், மக்களை பார்த்து கையசைக்க கூடாது, பேருந்து மேலே ஏறக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இப்படி ஒரு அரசியல் காழ்புணர்ச்சியுடன் நேர்மை திறனற்று நம்மை பற்றி குற்றம் சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட தமிழக முதல்வருக்கு ஒரு சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். பொய் மூட்டைகளையும், அவதூர்களையும் அவிழ்த்து விட்ட, கோடிகளைக் கொட்டி அமர்த்தப்பட்ட அறிவார்ந்த வழக்கறிஞர்களுக்கும், கபட நாடக தி.மு.க. அரசின் தில்லுமுல்லுகளை தாக்கு பிடிக்க இயலாமல் உச்ச நீதிமன்றத்தில் நின்றதை மக்கள் அறியாமலா இருப்பார்கள்.

உச்சபட்ச அதிகார மயக்கத்திலிருந்து தமிழக முதல்வர் பேசினாரோ மனிதாபிமானம் அரசியல் அறம் மாண்பு இவை எல்லாம் எதுவுமே இல்லாமல் வெறும் பேச்சில் மட்டும் பேசிக் கொண்டு அரசியல் ஆட்டத்தை ஆட தொடங்கி விட்டார் தமிழக முதல்-அமைச்சர். இப்பொழுது நான் கேட்ட கேள்வி அனைத்தும் நான் கேட்கவில்லை உச்ச நீதிமன்றம் கேட்டது. இவையெல்லாம் ஏன் எதற்கு என முதல்வர் அவர்களுக்கு புரிகின்றதா. உச்சநீதிமன்றம் மட்டுமல்ல நிஜத்திலும் மக்களுக்கு தமிழக அரசு மீது இருக்கின்ற நம்பிக்கை முழுவதுமாக மண்ணில் புதைந்து விட்டது இதுவாவது தமிழக முதல்-அமைச்சர் அவர்களுக்கு புரியுதா அல்லது புரியவில்லையா அப்படி இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த தி.மு.க. தலைமைக்கு ஆழமாகவும் அழுத்தமாகவும் மக்கள் புரிய வைப்பார்கள்.

அப்பொழுது கூட இவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பழக்க தோஷத்தில் ஒரு அறிக்கை வெளியிடுவார்கள். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் அப்படி என்று. ஒரு அறிக்கையை வெளியிட்டு அறிவாலயத்திற்குள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். இப்பொழுதே அந்த அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று. போன பொதுக்குழுவில் என்ன சொன்னேன் அதேதான் மீண்டும் சொல்கிறேன் இயற்கையும் இறைவனும் நம் தமிழக சொந்தங்களின் வடிவங்களில் மாபெரும் சக்தியாக நம் கூட நிற்கும் பொழுது எம் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் யார். அதனால் தோழர்களே நமக்கு வந்திருக்கும் இந்த இடையூறு தற்காலிக இடையூறு மட்டுமே அதனால் அனைத்தையும் தகர்த்தெறிவோம் மக்களோடும் கைகோர்த்து நிற்போம் மக்களுடன் களத்தில் இருப்போம் நம் பயணத்தில் தடம் மாறவே மாட்டோம்.

இப்பொழுதும் சொல்கிறேன் 2026 -ல் இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்று த.வெ.க. இன்னெற்று தி.மு.க.. இந்த போட்டி இன்னும் பலமாக மாறப்போகிறது. நூறு சதவீதம் வெற்றி நமக்கே வாகை சூடுவோம் வரலாறு படைப்போம் நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து