முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கம்

புதன்கிழமை, 5 நவம்பர் 2025      இந்தியா
Pudhucherry-2023-03-23

Source: provided

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் திமுக இவ்விவகாரம் தொடர்பாக 'அனைத்துக் கட்சி கூட்டத்தை' கூட்டியது. இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தி.மு.க. சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதுபோல, மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

இந்த நிலையில், புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, தேர்தல் பணியாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணி டிசம்பர் 4-ந்தேதி வரை நடைபெற உள்ள நிலையில், டிசம்பர் 9-ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதில் ஆட்சேபணை மற்றும் உரிமை கோரல் ஜனவரி 8-ந்தேதி வரை பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 7-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து