முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஜீத் பவார் மறைவு எதிரொலி: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

புதன்கிழமை, 28 ஜனவரி 2026      இந்தியா
Ajithh-Bavar 2024-12-07

மும்பை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் நேற்று பொது விடுமுறை அளித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் உத்தரவிட்டுள்ளர். மேலும், மாநிலம் முழுவதும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து பாராமதிக்கு சென்ற அஜீத் பவாரின் தனி விமானம் புதன்கிழமை காலை தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. தரையில் மோதிய விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில், விமானத்தில் பயணித்த அஜீத் பவார் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஃபட்னாவீஸ் பேசியதாவது: “மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். மாநிலத்தில் சோகமான சூழல் நிலவுகிறது. அவரைப் போன்ற ஒரு தலைவரை இழந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை நாங்கள் ஒன்றாக சந்தித்தோம். மகாராஷ்டிரத்தின் வளர்ச்சிக்கு அவர் பங்களித்து வந்த நேரத்தில், அவரது அகால மரணம் ஒரு பேரிழப்பாகும்.

நாங்கள் அவரது குடும்பத்தினருடன் துணை நிற்கிறோம். நானும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் பாராமதிக்குச் செல்லவுள்ளோம். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தேன், அவர்களும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

இதற்கிடையே  துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்ததை தொடர்ந்து மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி நேற்று தொடங்கி, வரும் 30-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு அரசு சார்பில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து