முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? நேரில் பார்த்தவர் அதிர்ச்சி தகவல்

புதன்கிழமை, 28 ஜனவரி 2026      இந்தியா
AjitPawar-1-2026-01-28

மும்பை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் விமானம் விபத்துக்குள்ளானது பற்றி நேரில் பார்த்தவர் விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து பாராமதிக்கு சென்ற அஜீத் பவாரின் தனி விமானம் புதன்கிழமை காலை தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. தரையில் மோதிய விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில், விமானத்தில் பயணித்த அஜீத் பவார் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த நிலையில், விமானம் விபத்துள்ளானதை நேரில் பார்த்தவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: நான் விபத்தை நேரில் பார்த்தேன். மிகவும் வேதனையாக இருக்கிறது. விமானம் கீழே இறங்கிய விதத்தைப் பார்த்தபோது தரையில் மோதிவிடுமோ எனத் தோன்றியது. அதேபோல், தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

தரையில் மோதியவுடன் விமானம் வெடித்துச் சிதறியது. நாங்கள் சம்பவ இடத்துக்கு அருகில் செல்வதற்குள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. சுமார் 4 முதல் 5 முறை விமானம் வெடிக்கும் சப்தம் கேட்டது. விமானத்துக்குள் இருந்தவர்களை மீட்க முயற்சித்தோம். ஆனால், பெரியளவில் தீப்பரவியதால் எங்களால் மீட்க முடியவில்லை. விமானத்தில் அஜீத் பவார் இருந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தோம். வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து