முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2026      தமிழகம்
DCM-1-2026-01-29

சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக கைத்தறி மற்றும் துணிநூல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.

இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;

தமிழ்நாடு துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் நேற்று (29.1.2026) கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசுத் தொகை காசோலைகளையும், தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையின்கீழ், ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம், வட்டி மானியம் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா நிறுவனத்திற்கு மாநில அரசின் பங்குத் தொகை வழங்குவதற்கான அரசின் ஆணைகளை வழங்கினார்.

மேலும், கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360ல் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருதுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய ஜவுளி ஏற்றுமதியாளர்களை சிறப்பிக்கும் வகையில் சிறு, குறு, நடுத்தர, பெரிய மற்றும் மிகப் பெரிய ஏற்றுமதியாளர்கள் என்ற 5 பிரிவுகளில் முதலிடம் பெற்ற 5 நிறுவனங்களுக்கு தலா 2.00 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை காசோலையுடன் பாராட்டுச் சான்றிதழ்களையும், இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்ற 10 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019ல் அறிவிக்கப்பட்டுள்ளபடி, 15 ஆண்டுகால பழைய நூற்பு இயந்திரங்களை நவீனப்படுத்த பெறும் வங்கி கடனுக்கு செலுத்தப்படும் வட்டிச் சுமையினை குறைக்க (7 ஆண்டுகளுக்கு) 2% வட்டி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு நூற்பாலைக்கு 11.70 லட்சம் ரூபாய் வட்டி மானியம் வழங்க அரசின் ஆணையினை வழங்கினார்.

மேலும் விசைத்தறிகள் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத தானியங்கி ரேப்பியர் தறிகளாக நவீனப்படுத்த (50% மானியம் - தறி ஒன்றுக்கு அதிகபட்சம் 1.00 லட்சம் ரூபாய்) மற்றும் புதிய நாடா இல்லாத தானியங்கி ரேப்பியர் தறி கொள்முதல் செய்ய மூலதன முதலீட்டு மானியம் (20% மானியம் - தறி ஒன்றுக்கு அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய்) வழங்கும் திட்டத்தின் கீழ் 12 விசைத்தறியாளர்களுக்கு மானியமாக மொத்தம் 67.49 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு துணை முதல்வர்  வழங்கினார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு துணை முதல்வர் முன்னிலையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும், சந்தைப் போக்குகள் , மேம்பட்ட தொழில்நுட்பங்கள், தரத் தரநிலைகள் மற்றும் நவீன செயல்பாட்டு திறன்கள் குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக துணிநூல் துறை, கார்ல் மையர் மற்றும் பவர்லூம் டெவலப்மெண்ட் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் ஆகியோருக்கிடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு துணை முதல்வர் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக கைத்தறி மற்றும் துணிநூல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து