முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை

புதன்கிழமை, 4 பெப்ரவரி 2026      உலகம்
Jaishankar 2023 06 08

வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது இந்திய - அமெரிக்க பொருளாதார கூட்டாண்மை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிலும் உள்ள வர்த்தக வாய்ப்புகளை, பரஸ்பரம் சிறப்பாக பயன்படுத்திக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஸ்காட் பெசன்ட் உடனான சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட்டை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்திய - அமெரிக்க பொருளாதார கூட்டாண்மை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த விவாதம் பயனுள்ளதாக இருந்தது’’ என தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ஸ்காட் பெசென்ட் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. எங்கள் பேச்சுவார்த்தையின்போது விநியோகச் சங்கிலிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும், பரஸ்பர நலன்கள் சார்ந்த தேசிய மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்’’ என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து