எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என்றுதான் எண்ணுகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அளித்த பதிலால் பலரும் அதிருப்தி அடைந்தனர்.
பாலியல் குற்றவாளியுடன் தொடர்புடைய முக்கியமான ஆவணங்களை, அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருக்கும் நிலையில், அது பற்றி தனியார் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பெண் செய்தியாளர் கவலை தெரிவித்ததுடன், கேள்வி எழுப்பினார்.
அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான பெரும் பணக்காரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறையிலேயே மரணமடைந்த நிலையில், அவரது வழக்கு விசாரணை ஆவணங்கள் வெளியாகியிருப்பது, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதாகவும் அவர் கூறிப்பிட்டார்.
சாட்சியங்களின் நேர்காணல்கள் மறைக்கப்பட்டிருப்பதாக ட்ரம்ப் பதிலளித்ததற்கு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற நினைக்கிறார்களே அது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று பெண் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து எப்ஸ்டீன் பற்றிய கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய ட்ரம்ப், இது தவிர நாட்டு நலன் தொடர்பான கேள்விகளை எழுப்பலாம். நாட்டின் சுகாதாரத் துறை மற்றும் மக்களின் நலன் குறித்து பேசலாம் என்றார்.
இதனைக் கேட்டதும் பெண் செய்தியாளர் கேள்வி எழுப்ப எத்தனித்தபோது, நீங்கள் மிக மோசமான செய்தியாளர், உங்களைப் போன்றவர்களால்தான் உங்கள் செய்தி நிறுவனத்துக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என்றுதான் நினைக்கிறேன், கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு முறை கூட நீங்கள் சிரித்து உங்களை நான் பார்த்ததில்லை. நீங்கள் ஏன் சிரிக்க மாட்டீர்கள் என்றால், நீங்கள் உண்மையைப் பேசுவதில்லை என்று ட்ரம்ப் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து, தனியார் ஊடக நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. தங்களது செய்தியாளர், ஒரு சிறப்பானவர், எப்போதும் உண்மையான ஆழமான செய்திகளை தொகுத்து வழங்குவார் என்று குறிப்பிட்டுள்ளது.
செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ட்ரம்ப் பேசியது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


