முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு

சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2026      தமிழகம்
Pudhucherry-2023-03-23

புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்.ஐ.ஆர்) பணிகள் நடைபெற்றன. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பரில் வெளியான நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் புதுச்சேரியில் கடந்த டிச. 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று (பிப். 14) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி, புதுச்சேரி, காரைக்கால் என மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தற்போது 9,44,211 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4,43,595 ஆண்கள், 5,00,477 பெண்கள், 139 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த வருகிற 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் வருகிற பிப். 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து