முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமா் பதவிக்கு போட்டியிடுவேன்: முலாயம்சிங்

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, நவ.23 - சமாஜ்வாதி கட்சித்தலைவா் முலாயம்சிங் யாதவ் பரேலி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பா.ஜ.க சார்பில் பிரதமா் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடி, காங்கிரஸ் சார்பில் முன்னிலை படுத்தப்படும் ராகுல் இருவருமே பிரிவினை சக்திகளாகத்தான் உள்ளனா். அவா்களுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு நிச்சமயாக தனிப்பெரும்பான்மை கிடைக்காது. இதனால் 3- வது அணியே ஆட்சி அமைக்கும். மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை மேற்கு வங்கம், தமிழ் நாடு, உத்தர பிரதேசம், ஓரிசா ஆகிய 4 மாநிலங்கள் தான் தீர்மானிக்கும். இந்த 4 மாநிலங்களில் உத்தரபிரதேசம் தான் மிகப்பெரிய மாநிலமாகும் எனவே அடுத்த ஆட்சி அமைப்பதில் உத்தரபிரதேசமே முக்கிய பங்கு வகிக்கும். பிரதமா் பதவிக்கு நானும் போட்டியிடுகிறேன். என்னை வலுவான முலாயம்சிங் ஆக நீங்கள் டெல்லிக்கு அனுப்ப வேண்டும். உத்தரபிரதேசத்தில் உள்ள 80 பாரளுமன்ற தொகுதிகளில் 60 தொகுதிகளில் வெற்றி பெற நான் தீவிரமாக உள்ளதாக சிலா் சொல்கிறார்கள்.இல்லை 80 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்று பெற வேண்டும் என்று விரும்புகிறேன். பிரதமரை மிகவும் பல வீனமானவராக காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது. இது நமது நாட்டுக்கு ஆபத்தாகி விடும். காங்கிரஸ் சார்பில் பிரதமா் பதவிக்கு முன் நிறுத்தப்படும் இளைஞா், அவசர சட்டத்தை முட்டாள்தனமானது கிழித்து குப்பையில் போடுங்கள் என்கிறார். அந்த சமயத்தில் பிரதமா் மன்மோகன் சிங் தன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உணவு தானியப்பொருட்களை இலவசமாக கொடுக்க வேண்டும். என்று  நான் மத்திய அரசிடம் கூறினேன். ஆனால் காங்கிரஸ் தலைவா்கள் அதை கண்டு கொள்ளவில்லை. நாங்கள் மத்தியில் ஆட்சி அமைத்தால், உணவு பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுப்போம். அதுபோல இந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். முஸ்லிம்களால் எந்த பிரிவினையும் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே தான் உத்தரபிரதேச மாநில போலீஸ் பணியில் முஸ்லிம்கள் எண்ணிக்கை உயா்த்தப்பட்டது. இவ்வாறு முலாயம்சிங் யாதவ் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago