முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை புதை குழிக்குள் 50 எலும்புக் கூடுகள்

புதன்கிழமை, 29 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜன.30 - இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழிக்குள் இருந்து இதுவரை 50 எலும்புக் கூடுகள்  தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக் கூடுகள் இலங்கையில் ராணுவத் துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது காணாமல்போன தமிழர்களுடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் அஜித்ரோஹனா கூறுகையில், இந்தப் புதைகுழி குறித்து துப்பு துலக்க புலனாய்வுத் துறையினரின் உதவியுடன் மேலும் அகழ்வுப் பணி நடைபெற்று வருகிறது என்றார். 

தற்போது மேலும் 3 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கண்டு பிடிக்கப்பட்ட  எலும்புக் கூடுக ளின் எண்ணிக்கை 50 ஆய உயர்ந்துள்ளது. கோர்ட் அதிகாரி தனஞ்செயா வைத்தியரத்னே தலைமையிலான தடயவியல் நிபுணர்கள் குழு இக்குழிக்குள் பல அடுக்குகளாக சடலங்கள் புதைக்கப் பட்டிருப்பதாக அந்த குழு தெரிவித்துள்ளது. 

மன்னார் மாவட்டத்தில் திருக்கதீஸ்வரம் பகுதியில் இலங்கை அரசின் நீர்வளத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடிநீர் குழாய் இணைப்புக்காக குழி தோண்டிய போது இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டது. 

      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago