முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரச்சினை - 12 எம்.பிக்கள் பாகிஸ்தான் பயணம்

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மே.27 - காஷ்மீர் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்த சுதர்சன நாச்சியப்பன், ஆரூண் உட்பட 12 எம்.பிக்கள் அடங்கிய குழு பாகிஸ்தான் சென்றுள்ளது. காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியா வசமும், மற்றொரு பகுதி பாகிஸ்தான் வசமும் உள்ளது. இது தவிர காஷ்மீரின் ஒரு பகுதியை சீனாவும் ஆக்கிரமித்து வைத்துள்ளது. தீவிரவாதிகள் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட ஆயுத்தமாகி வரும் நிலையில் இந்திய அரசு சார்பில் 12 எம்.பிக்கள் அடங்கிய உயர்நிலைக் குழு பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. 

முன்னாள் மத்திய மந்திரியும், காஷ்மீர் மாநில தலைவருமான சைபுதீ சோஸ் இக்குழுவின் தலைவராவார். மேலும் இக்குழுவில் 5 காங்கிரஸ் எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவில் சுதர்சனம் நாச்சியப்பன், கேசவராவ், ஆரூண், ரஷீத், ஷாதிலால், பாத்ரா, மதன்லால் ஷர்மா ஆகிய 5 பேரும் காங்கிரசை சேர்ந்தவர்கள் ஆவர். சையத் அஜீஸ் பாஷா, முகமது அமீர், ஆர்.சி.சிங் ஆகிய மூவரும் இடதுசாரி அணியை சேர்ந்தவர்கள் ஆவர். தேசியவாத காங்கிரசை சேர்ந்த தாரிக் அன்வர், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த சைபுதீன், ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த ராஜ்நிதி பிரசாத் ஆகியோர் மற்ற உறுப்பினர்கள் ஆவர். 

தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்.பிக்கள் யாருக்கும் இந்த குழுவில் இடம் அளிக்கப்படவில்லை. காஷ்மீரை சேர்ந்த 3 எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளதால் காஷ்மீர் பிரச்சினைக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதியாக தெரிகிறது. காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த குழுவினர் ஆலோசனை நடத்துவார்கள். மேலும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்தும் பாகிஸ்தான் தலைவர்களுடனும் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago