எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர், ஜூன்.9 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 இலட்சத்து 67 ஆயிரத்து 850 மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன தலைமை வகித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க அமைச்சர் பேசியதாவது,
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக 42 வகையான திட்டங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ-4.25 இலட்சம் மதிப்பில் 80 நபர்கள் பயனடைந்துள்ளனர். மனவளர்சி குன்றியோர், கடுமையாக இயலாதோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என 4 வகையான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1495.00 இலட்சம் மதிப்பில் 4509 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.48.00 இலட்சம் மதிப்பில் 2054 எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளி மாணவஃமாணவிகள் பயனடைந்துள்ளனர். பார்வையற்றோர்களுக்கான வாசிப்பாளர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.28 இலட்சம் மதிப்பில் 77 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று நிலைகளைப்பெற்ற கண் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் மாணவஃமாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 3.16 இலட்சத்தின் 18 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
கை, கால் பாதிக்கப்பட்டோர் காதுகோளாதோர் வாய்பேச இயலாதோர் கண்பார்வையற்றோர்களை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபர்கள் திருமண உதவித்திட்டம், மற்றும் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்துக்கொள்ளும் மாற்றுத்திறனாளிக்கு திருமணநிதியுதவி திட்டம் என நான்கு வகையான திட்டங்களின் கீழ் ரூ. 19.50 இலட்சம் மதிப்பில் 112 தம்பதியினர்கள் பயனடைந்துள்ளர். இலவச பேருந்து பயணச ;சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.721.00 இலட்சம் மதிப்பில் 1935 நபர்கள் பயடைந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் பயிற்சி,கணினி பயிற்சி,ஆய்வுக்கூட பயிற்சிகள் போன்ற பயிற்சிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.42 இலட்சம் மதிப்பில் 51 நபர்கள் பயனடைந்துள்ளனர். 6 வயதுக்குட்பட்ட காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகள், மன வளர்ச்சி குன்றிய, மற்றும் கண் பார்வையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 11.70 இலட்சம் மதிப்பில் 330 சிறப்பு குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் வாயிலாக ரூ 18.70 இலட்சம் மதிப்பில் 120 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
மன வளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் பணிப்புரியும் சிறப்பாசிரியர்களுக்கு மதிப்புூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 17.42 இலட்சம் மதிப்பில் 100 சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்கள் பயனடைந்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ரூ. 500000 மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 90.00 லட்சம் மதிப்பில் 3200 நபர்கள் உபகரணங்கள் பெற்று பயனடைந்துள்ளனர்.
பொது பிரிவின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி, செயற்கை அவயங்கள், முடநீக்கியல் சாதனங்கள், பார்வை யற்றோருக்கான மடக்கு ஊன்றுக்கோல், காது கேளாதோருக்கான காதொலி கருவிகள், மோட்டார் பொருதிய தையல் இயந்திரங்கள் போன்ற திட்டங்களின்; வாயிலாக ரூ 43.38 லட்சம் மதிப்பில் 938 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
2011ம் ஆண்டு முதல் 4784 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையும் 1414 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2011ம் ஆண்டு முதல் இது வரை ரூ.18 கோடியே 53 லட்சம் 26 ஆயிரத்து 351 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இது வரை 33 ஆயிரத்து 291 நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. விழாவில் 75 நபர்களுக்கு ரூ.7 இலட்சத்து 67 ஆயிரத்து 850 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .
தொடர்ந்து விழாவில் மீன்வளத் துறை சார்ப்பில் 23 மீனவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.46 ஆயிரத்திற்கான உதவி தொகைகளையும், தீண்டாமை கடைப்பிடிக்காத மத நல்லிணக்கத்துடன் வாழும் மாவட்ட அளவில் சிறந்த கிராமத்திற்கான பரிசுத்தொகை ரூ.10 இலட்சத்திற்கான காசோலையை பாபநாசம் ஒன்றியம், ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் .க.ஜெய்சங்கர்pடமும் மேலும், ஒரத்தநாடு வட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த .டி.சுமதி-தென்னரசு தம்பதியினருக்கு முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டு பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளும் பிறந்த நிகழ்வினை சிறப்பினமாக கருதி முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தை ரூ.15 ஆயிரத்து 200 வீதம் 5 குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக ரூ.76ஆயிரத்திற்கான பத்திரங்களையும் அமைச்சர் வழங்கினார்.
விழாவில் சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, (தஞ்சாவூர்), எம்.ரெத்தினசாமி (திருவையாறு), மாநகராட்சி மேயர் .சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சி தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், நிலவள வங்கி தலைவர் .துரை வீரண்ணன், மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் .ரவிச்சந்திரன், நகர் மன்ற உறுப்பினர் சண்முகபிரபு, அரசு வழக்கறிஞர் தங்கப்பன், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-08-2025.
14 Aug 2025 -
வாக்காளர்களை இழிவுபடுத்த வேண்டாம்: தேர்தல் ஆணையம்
14 Aug 2025புதுடெல்லி, வாக்காளர்களை இழிவுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது: த.வெ.க. மாநாடு பணிகள் மும்முரம்
14 Aug 2025மதுரை: த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
-
தூய்மைப் பணியாளர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
14 Aug 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
-
இந்தியா - பாக். பிரிவினை காயம் ஆறவில்லை: தமிழ்நாடு கவர்னர்
14 Aug 2025சென்னை, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
-
தொடர் விடுமுறை எதிரொலி: விமான கட்டணங்கள் உயர்வு
14 Aug 2025சென்னை, சுதந்திர தினத்தையொட்டி, வருகிற வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் விடுமுறை வருகிறது.
-
அவர்கள் தேச விரோதிகளா? தூய்மைப் பணியாளர்கள் கைது விவகாரத்தில் விஜய் ஆவேசம்
14 Aug 2025சென்னை, அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
-
நமது வரலாற்றின் துயரமான அத்தியாயம் தேச பிரிவினை பிரதமர் நரேந்திர மோடி பதிவு
14 Aug 2025புதுடெல்லி: நாடு பிரிவினையைச் சந்தித்தபோது எண்ணற்ற மக்கள் கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
பாக்., ராணுவத்தில் புதிய படை
14 Aug 2025லாகூர், பாகிஸ்தான் நாட்டின் 79-வது சுதந்திர நாள் நேற்று (ஆக.14) கொண்டாடப்பட்டது.
-
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
14 Aug 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
வட மாநிலங்களில் கனமழை
14 Aug 2025புதுடெல்லி, நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
-
பீகார், உ.பி., இ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை: டெல்லிக்கு ஆர்ஞ்ச் எச்சரிக்கை
14 Aug 2025புதுடெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்லிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
வாக்குத்திருட்டு என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்
14 Aug 2025டெல்லி, வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
-
ரசிகர் கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: கன்னட நடிகர் தர்ஷன் கைது
14 Aug 2025பெங்களூரு: நடிகை பவித்ரா கவுடாவை சீண்டிய ரசிகரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
-
உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு இது: தூய்மை பணியாளர்கள் மாண்பை விட்டுக்கொடுக்கவே மாட்டோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 Aug 2025சென்னை: என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு என தெரவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தூய்மை பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் உறுதி
-
சாலைகள் சீரமைக்கப்படும்: ஏலகிரி மலைவாழ் மக்களிடம் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
14 Aug 2025ஏலகிரி: தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஏலகிரியில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.
-
அரசியல் சண்டைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டிருக்கிறோம்: தேர்தல் ஆணையம் அதிருப்தி
14 Aug 2025புது தில்லி, அரசியல் சண்டைகளுக்கு நடுவே நாங்கள் மாட்டிக் கொண்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
வார்னருக்கு ஜோ ரூட் பதிலடி
14 Aug 2025ஆஷஸ் தொடருக்காக டேவிட் வார்னரின் விமர்சனத்துக்கு ஜோ ரூட் “இதெல்லம் புதியதா என்ன? இன்னும் 100 நாள்கள் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
-
ஆதாரை அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு
14 Aug 2025புதுடெல்லி: ஆதாரை அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
காஷ்மீரில் மேகவெடிப்பு - 33 பேர் பலி
14 Aug 2025காஷ்மீர், ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி சுமார் 33 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
14 Aug 2025சென்னை: மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை முதல்வர் தொடங்கி வைத்தார்.
-
சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுவிப்பு
14 Aug 2025சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழக கவர்னரில் தேநீர் விருந்தை புறக்கணித்தார் முதல்வர் ஸ்டாலின்
14 Aug 2025சென்னை: தமிழக கவர்னரில் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.
-
செங்கல்பட்டில் ரூ.700 கோடியில் மின் கருவிகள் உற்பத்தி ஆலை ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
14 Aug 2025சென்னை: ரூ.
-
வாக்கு திருட்டு விவகாரம்: வரும் 17-ம் தேதி முதல் பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம்
14 Aug 2025பீகார், தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்ட