முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் கொலை: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஜூன்.17 - மும்பையில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது விசாரித்துள்ள அளவுக்கு அறிக்கையை தாக்கல் செய்யும்படி மகாராஷ்டிரா அரசு மற்றும் காவல்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

மும்பையின் புறநகர் பகுதியான பொவாயில் கடந்த 11-ம் தேதி ஒரு ஆங்கில பத்திரிகை நிருபர் ஜோதீர்மாய் தேவ் அடையாளம் தெரியாத 4 பேர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மும்பையில் பத்திரிகையாளர்கள் பேரணி நடத்தினர். தற்போது தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். இந்த படுகொலை சம்பந்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் புனே நகரை சேர்ந்தவர் மற்ற 3 பேரும் மும்பையை சேர்ந்தவர்கள். இவர்கள் 4 பேரும் பிரபல நிழல் தாதா சோட்டா சகீலின் கூலியாட்கள் என்று கூறப்படுகிறது. 

இந்தநிலையில் ஜே.தேவ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளதை ஒரு அறிக்கையை வரும் 21-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் மும்பை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் அரசு வழக்கறிஞர் ரவி காதம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.வி.மோர் ஆகியோர் உத்தரவிட்டனர். மூத்த பத்திரிகையாளர் ஜே.தேவ் படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் வழக்கறிஞர் வி.பி.பட்டீல், முன்னாள் பத்திரிகையாளர் கேத் திரோத்கர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை ஐகோர்ட்டு பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சி.பி.ஐ. விசாரணகோரும் இரண்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களையும் கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago