எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க் : அமெரிக்காவில் மேற்கு வெர்ஜினியா மாகாணத்தில் வரலாறு கண்டிராத வகையில் பலத்த மழை பெய்தது. இது தொடர்பான சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து வெர்ஜீனியா பகுதியை பேரழிவு பகுதியாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள மலைப்பாங்கான மாகாணமான மேற்கு வெர்ஜினியாவில் கடந்த சில நாட்களாக புயல் காரணமாக பலத்த மழை பெய்து வந்தது. கடந்த வியாழக்கிழமை மட்டுமே அங்கு 10 அங்குல மழை கொட்டியது. இதன்காரணமாக அங்குள்ள ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் இப்படி ஒரு மழை அங்கு பெய்தது இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அந்த மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ஓய்வு தலமான கிரீன்பியர் கவுண்டி மிகவும் பாதித்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடுதான். இங்கு மட்டுமே வெள்ளத்துக்கு 15 பேர் பலியாகி உள்ளனர்.
மாகாணத்தில் பல நகரங்களிலும் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. 66 ஆயிரம் வீடுகள், இருளில் மூழ்கின. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. வீட்டு கூரை உச்சிகளில் இருந்தும், மொட்டை மாடிகளில் இருந்தும் மக்கள் மீட்கப்பட்டனர்.
மாகாணம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்தனர். வெள்ள சேதம் குறித்த அறிக்கையை மேற்கு விர்ஜீனியா மாகாண கவர்னர் இயர்ல் ரே தாம்பிலின், அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் மேற்கு வெர்ஜீனியாவை பேரழிவு பகுதியாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


