எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கால்நடை வளர்ப்பில் கறவை மாடு வளர்ப்பு என்பது சத்தான பால், வளமான எரு ஆகியவற்றை தருவதோடு ஆண்டு முழுவதும் சுயவேலைவாய்ப்பு அளித்து நிலையான வருவாய் ஈட்டிக்கொடுக்கிறது. இன்றைய கன்றே நாளைய பசு. ஆகவே கன்றுகளை நன்கு பராமரிப்பதன் மூலம் பசுக்களை நமது பண்ணையிலேயே உருவாக்கலாம். சந்தைகள், வீடுகள், தரகர்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள் மூலம் கறவை மாடுகளை தேர்ந்தெடுத்து வாங்கலாம். ஜெர்சி கலப்பின பசுக்கள், வடநாட்டைச் சேர்ந்த கறவை இனங்களான கிர், சாகிவால் தார்பார்கள் போன்ற இனங்களை வாங்கலாம். எந்த இனமாக இருந்தாலும் இளவயது மாடுகளை வாங்குவதே பண்ணைக்கு லாபகரமாக இருக்கும். முதல் அல்லது இரண்டாவது ஈற்று மாடுகளை வாங்குவது நன்று. மாடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மாடுகளின் நாசிகளுக்கு நடுவே உள்ள கறுப்பு பகுதி ஈரமாக இருக்க வேண்டும். அசைபோட்டுக் கொண்டிருக்க வேண்டும். தோல் மிருதுவாகவும், மினுமினுப்பாகவும் இருக்க வேண்டும். சாணம் பேதி, ரத்தம், சீதம் அல்லது துர்நாற்றத்துடன் இருந்தாலோ மாட்டின் சிறுநீர் வெளிமஞ்சள் நிறமற்று சிவப்பு நிறமாக இருந்தாலோ, மாட்டின் ரோமங்கள் பெரிதாகவும் அடர்த்தியாகவும் இருந்தாலோ அது நோயின் அறிகுறியாகும்.
பால்மடி, உடலோடு ஒட்டி பெருத்து இருக்க வேண்டும். மடி மிருதுவாக இருக்க வேண்டும், காயங்கள், கொப்புளங்கள் இருக்கக்கூடாது. நான்கு காம்புகளும் சீராக சதுர வடிவில் உள்ளது போல் இருக்க வேண்டும். மடிக்குச் செல்லும் இரத்த நாளம் நன்கு புடைத்துக் காணப்பட வேண்டும். பால்கறக்கும் போது காம்புகளில் அடைப்பு இல்லாமல் இருக்க வேண்டும். காம்புத் துவாரம் நன்றாக இருந்தால் பால் கறக்கும் போது சீராக வரும். மாடு வாங்கும் பொழுது கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
மாட்டுக்கொட்டகை அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு தகுந்தாற்போல் பனை, தென்னை ஓலை மூங்கில் கொண்டு அமைக்கலாம் அல்லது செங்கல், சிமிண்ட், ஆஸ்பெஸ்டாஸ் அலுமினியம் கூரையுடன் கூடிய கட்டிடமாகவும் அமைக்கலாம். கொட்டகையின் நீளம் கிழக்கு மேற்காக இருக்குமாறு அமைக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி மாடுகள் காலாற உலாவர திறந்தவெளிபரப்பு இருத்தல் நன்று. கூரையின் உயரம் 220 செ.மீ. இருந்தால் போதுமானது ஆகும்.
சரிவிகித உணவும் நல்ல பராமரிப்பும் அளிக்கப்பட்ட கலப்பின கிடாரிக் கன்றுகள் 12 முதல் 18 மாத வயதில் சுமார் 200 கிலோ உடல் எடையை அடைந்து பருவ வயதை எட்டுகிறது. இரண்டு வயதிற்குள் கன்றுகள் சுமார் 200 கிலோ உடல் எடையை எட்டி சரியான தருணத்தில் இனப்பெருக்கம் செய்தால் அது மூன்று வயதிற்குள் முதல் கன்றை ஈனும். இந்த கால இடைவெளி எவ்வளவு தள்ளிப்போகிறதோ அவ்வளவு நாட்கள் கன்று பிறப்பு தள்ளிப்போகும். அதனால் நாட்கள் தள்ளிப்போய் பண்ணையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்.
சினைப்பருவ காலங்களில் கிடேரி பசு அமைதியாக இருக்காது. அடிக்கடி அடிவயிற்றிலிருந்து கத்தும். அருகில் உள்ள மாடுகள் மீது தாவும். மேலும் பிற மாடுகள் தன்மீது தாவினால் அசையாது நின்று அனுமதிக்கும். பிறப்புறுப்பு சிவந்து தடித்திருக்கும். தீவனம் உண்ணும் அளவு குறையும். கண்ணாடி போன்ற நிறமற்ற சளி மாதிரியான திரவம் பசுவின் பிறப்புறுப்பிலிருந்து வடியும்.
காலை நேரத்தில் சினை அறிகுறிகள் தென்பட்டால் மாலை வேளையிலும், மாலை அல்லது இரவு நேரத்தில் தென்பட்டால் அடுத்தநாள் காலையிலும் கருவூட்டல் செய்வது சிறந்தது. கருவூட்டல் செய்த மாடுகளை மூன்றாவது மாதத்தில் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்து சினையை உறுதி செய்ய வேண்டும்.
கன்று பிறந்தவுடன் மூக்கு, வாயைச் சுற்றியுள்ள சளி போன்ற திரவத்தை காய்ந்த துணியால் நன்கு துடைக்கவும். கன்றின் பின்னங்காலை பிடித்து தூக்கி மூக்கில் உள்ள சளியை ஒழுகச் செய்து அப்புறப்படுத்த வேண்டும். மூச்சுவிட சிரமப்பட்டால் மார்பை அழுத்தியோ அல்லது வாயை திறந்து நாக்கை விரலால் தடவியோ மூச்சுவிடும் படி செய்யலாம். தொப்புள் கொடியை கன்றின் தொப்புளிலிருந்து 2 அங்குல தொலைவில் நூலினால் கட்டிவிட்டு சுத்தமான கத்தரியால் வெட்டி முனையில் டிங்ஞ்சர் அயோடின் திரவத்தை தடவவேண்டும். கன்று பிறந்த அரைமணி நேரத்திற்குள்ளாக சீம்பால் குடிக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். கன்று பிறந்த ஒரு வாரத்திற்குள் குடற்புழு நீக்க மருந்து கொடுத்து பிறகு 6 மாத வயது வரை மாதம் ஒரு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். 6 மாதங்களுக்கு பிறகு 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கன்றுகளை பேன் மற்றும் மாட்டு ஈ போன்ற புற ஒட்டுண்ணிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.
அடர்தீவனத்தில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். கால்நடைகள் விரும்பி உண்ணும் பொருளாகவும் விலை மலிவாகவும் இருத்தல் நன்று. அடர்தீவனக்கலவையில் 100 கிலோ தயாரிக்க கீழ்க்கண்ட விகிதத்தில் பொருட்களை கலந்து தயாரிக்கலாம். தானிய வகைகள் - 35 கிலோ ( மக்காச்சோளம் அல்லது கம்பு அல்லது சோளம் ), புண்ணாக்கு வகைகள் - 25 கிலோ ( கடலைப்புண்ணாக்கு அல்லது எள்ளுப்புண்ணாக்கு ), தவிடு வகைகள் - 37 கிலோ ( அரிசித்தவிடு அல்லது கோதுமை தவிடு ), தாது உப்புக்கள் - 2 கிலோ ( அக்ரிமின் அல்லது சப்ளிவிட் - மருந்துவ கடைகளில் கிடைக்கும் ), சாதாரண உப்பு – 1 கிலோ ( சாப்பாடு உப்பு ).
பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதன் மூலம் செலவை குறைத்து பண்ணையை இலாபகரமாக நடத்த இயலும். பசுந்தீவனம் அதிக நார் மற்றும் புரதசத்தை தன்னுள் கொண்டிருக்கிறது. பல்லாண்டு தீவனப்புல் வகை – கம்பூ நேப்பியர் வீரியப்புல் ( கோ-1, கோ-3, கோ-4 ), கினியா புல், கொழுக்கட்டைப்புல், எருமைப்புல். தானியப்பயிர்கள் - தீவனச்சோளம், கம்பு, மக்காச்சோளம். பயறு வகை தீவனம் - வேலிமசால், காராமணி, குதிரைமசால், முயல்மசால், சணப்பை. தீவன மரங்கள் - சவுண்டல், அகத்தி, கிளைரிசிடியா.
தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க – கோமாரி நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 4 மாத வயதில் பின்பு 6 மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசி போடலாம். சப்பை நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். தொண்டை அடைப்பான் நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். அடைப்பான் நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். ( நோயுள்ள பகுதிகளில் மட்டுமே இத்தடுப்பூசி போட வேண்டும் ). மேலும் விபரங்களுக்கு:-
உதவி பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
சேலம்.
தொலைபேசி 0427-2410408
தொகுப்பு:
முனைவர் து.ஜெயந்தி
முனைவர் ப.ரவி
மருத்துவர் என்.ஸ்ரீபாலாஜி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 4 days ago |
-
ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலி
01 May 2025கீவ்: உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
-
4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அங்கோலா அதிபர் இந்தியா வருகை
01 May 2025அங்கோலா: அங்கோலா நாட்டு அதிபர் 4 நாள் பயணமாக இந்தியா வந்தார். இருநாடுகளுக்கும் இடையிலான ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இ-பாஸ் சர்வரில் சிக்கல்: நீலகிரி சுற்றுலா பயணிகள் அவதி
01 May 2025நீலகிரி: இ-பாஸ் சர்வரில் திடீரென சிக்கல் ஏற்பட்டதால், ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் இ-பாஸ் எடுக்க முடியாமல் அவதியடைந்தனர்.
-
பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்
01 May 2025இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினட் ஜெனரல் முகம்மது அசிம் மாலிக்கை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
-
மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டார்: ஷ்ரேயாஸ் ஐயருக்கு பாண்டிங் பாராட்டு
01 May 2025சென்னை: ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
-
தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்: செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
01 May 2025ஈரோடு: தொண்டனாகவே இருந்து பணியாற்ற விரும்புவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
-
மதுரையில் விஜய்க்கு த.வெ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
01 May 2025மதுரை: மதுரையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
எந்த மைதானத்திலும் சேஸிங் செய்வது பிடிக்கும்: ஷ்ரேயாஸ்
01 May 2025சென்னை: பஞ்சாப் அணியின் கேப்டனும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ஷ்ரேயாஸ் ஐயர் எந்தத் திடலிலும் சேஸிங் செய்வது பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல்.: விக்னேஷ் புதூர் விலகல்
01 May 2025காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து இளம் சுழல்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதுர் விலகியதாக 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
01 May 2025மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை வினாடிக்கு 1363 கனஅடியாக குறைந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2025
02 May 2025 -
சொந்த மண்ணில் தற்போதுதான் சிறந்த ஆடுகளத்தை பெற்றுள்ளோம் சென்னை கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டி
01 May 2025சென்னை: சொந்த மண்ணில் தற்போதுதான் சிறந்த ஆடுகளத்தைப் பெற்றுள்ளோம் என பஞ்சாப் உடனான தோல்விக்குப் பிறகு சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.
-
தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: கில்கிறிஸ்ட் சுளீர்
01 May 2025சென்னை: சி.எஸ்.கே. கேப்டன் தோனி தன்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை என முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
-
மெதுவாக பந்துவீச்சு: ஷ்ரேயாஸுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
01 May 2025சென்னை: மெதுவாக பந்துவீசியதால் சி.எஸ்.கே.வுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக ஐ.பி.எல்.
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ்
02 May 2025புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மே 6ல் கனமழை பெய்ய வாய்ப்பு
02 May 2025சென்னை : தமிழகத்தில் மே 6ம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
02 May 2025சென்னை : தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
-
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
போக்சோ புகார்களில் இனி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 4 நாட்களில் இடைநீக்கம்
02 May 2025சென்னை : தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக
-
போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
02 May 2025சென்னை : அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார
-
அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க தேடுதல் குழுவை அறிவித்தது தமிழ்நாடு அரசு
02 May 2025சென்னை : அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிர
-
ஈரோடு இரட்டை கொலை: இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம்
02 May 2025ஈரோடு : ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தில், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.
-
அதிர்ச்சி சம்பவம்.. ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை - 8 தனிப்படைகள் அமைப்பு ஈரோடு அருகே முதிய தம்பதி கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு
02 May 2025ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தோப்பு வீட்டில் இரட்டை கொலை, கொள்ளை நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
02 May 2025சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பண