எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதியில் இன்று அதிகாலையிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது வங்ககடலில் இலங்கை அருகே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வேதாரண்யம், தலைஞாயிறு கோடியக்கரை, கரியாப்பட்டினம், கருப்பம்புலம், தாணிக்கோட்டகம், வாய்மேடு, செம்போடை, கத்தரிப்புலம், ஆயக்காரன்புலம் போன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது.
பருவமழை சரிவர பெயாமல் நிலத்தடி நீர்மட்டம் கூட குறைந்திருந்தது தற்போது பெய்யும் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர் இந்த மழை தொடர்ந்து பெய்தால் கால்நடைகளுக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
வேதாரண்யம் கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் உள்ளனர்.
வங்ககடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் சீற்றத்துடன் கொந்தளிப்பாகவும், ஆழ்கடல் பகுதியிலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது இதனால் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், போன்ற கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை மீனவர்கள்; கடலுக்கு செல்லாததால் ஐநூறுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடற்கரையோரத்திலும் ஆற்றோரத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


