எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை.நவ.2 - வருகிற குளிர் காலக்கூட்டத்தொடரில் வலுரான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறினால் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரா மத்திய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று கடந்த மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரப்பபடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
ஆனால் ஊழலுக்கு எதிரான அந்த வலுரான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்ப்படவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்னா ஹசாரே ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா பற்றி மத்திய அரசிலும் காங்கிரசிலும் உள்ள பொறுப்புள்ள மனிதர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனவே ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
நடக்க இருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வலுவான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்ற தவறினால் குளிர்கால கூட்டத்தொஏடர் முடியும் நாளில் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப்போவதாகவும் அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் 22 ம் தேதி துவங்கி டிசம்பர் 23 ம் தேதி முடிவடைகிறது.
குளிர்கால கூட்டத்தொடரின் போது வலுவான ஜன் லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து உறுதி கூறி வருகிறது.
இதே போல இந்த மசோதைவை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்னா ஹசாரேவின் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதைவை நிறைவேற்றாவிட்டால் அந்த கூட்டத்தொடரின் கடைசி நாலன்று தான் மீண்டும் உண்ணாவிரதத்தை துவக்க போரதாகவும் அப்போது தனது குழுவினர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த பிரச்சினையை மக்கள் முன்பு எடுத்து சொல்வார்கள் என்றும் அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
கடந்த மாதம் 16 ம் தேதி முதல் தனது சொந்த கிராமத்தில்த மவுன விரதம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரே பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் ஏற்கனவே டெல்லி ராம்லீலா மதைானத்தில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை பிரதமர் எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழியின் பேரில்தான் கைவிட்டதாகவும் அந்த எழுத்து மூலமான உறுதி மொழியை மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்தான் தன்னிடம் வழங்கியதாகவும் ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா நாட்டில் ஊழலை ஒழிக்க உதவிகரமாக இருக்கும் என்றும் அதன் வாயிலாக நாட்டில் அதிகமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உதவும் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் காரணமாக நாட்டில் உள்ள சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடருவது கடினமான காரியமாக இருக்கிறது என்றும் ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்கள் தங்கள் குடும்பத்தை நடத்துவது மிக கடினமான காரியமாக இருக்கிறது.
அரசாங்கம் செலவு செய்யும் ஒரு ரூபாயில் 10 பைசா மட்டுமே வளர்ச்சி பணிகளுக்கு போகிறது என்றும் வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் வளர்ச்சிப்பணிகளுக்கான செலவ அதிகரிக்கும் என்றும் அதன் மூலம் சாதாரண மக்கள் பயன் அடைவார்கள் என்றும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


