எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.- 5 - சிம்பு நடித்த `ஒஸ்தி' படத்தை வெளியிட விடாமல் தடுக்க சதி நடக்கிறது என்று டி.ராஜேந்தர் கூறினார். இதுகுறித்து இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒஸ்தி படம் வருகிற 8-ம் தேதி வெளியிட உள்ளோம். தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்கிறார்கள். இந்த படத்தை வெளியிட விடாமல் சதி நடக்கிறது. கோவை, திருப்பூர் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் போட்டி விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்தி கட்ட பஞ்சாயத்து செய்கிறார். இவர் சங்கம் நடத்தக் கூடாது என்று கோர்ட் தடை விதித்தும் அதை மீறி அவர் சங்கம் நடத்துவது எப்படி? ஒஸ்தி படத்தை பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெளியிட ஒத்துழைக்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சிப்பேன். தடைகளையெல்லாம் தகர்த்தெறியும் தைரியசாலி முதல்வர் ஜெயலலிதா. திரையுலகிலிருந்து அரசியல் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் நீங்கள், கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்கு சென்று கொடியை ஏற்றியவர் நீங்கள், அப்படியிருக்க கலையுலகத்தின் கஷ்டங்களைப் பார்த்து உங்கள் கண்கள் திறக்காமல் இருக்குமா? கதறலைதான் உங்கள் காதுகள் கேட்காமல் போகுமா? ஒரு பக்கம் சின்னத்திரைகளின் வளர்ச்சி, மறுபக்கம் திருட்டு வீடியோவால் தளர்ச்சி, இன்னொரு பக்கம் திரைப்படங்களுக்கு மாநகரங்களில் 30 சதவீதம் வரை கேளிக்கை வரி என்ற அதிர்ச்சி, கர்நாடகத்தை எடுத்துக் கொண்டால் கன்னடப் படங்களுக்கு முழு வரி விலக்கு. வாடும் எங்களுக்கு காட்டுங்கள் ஒரு வழி, பிரச்சினைகளால் பிதுங்கிக் கொண்டிருக்கிறது எங்கள் விழி. யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர். நடித்து குறள் டி.வி. மூலம் வெளியாகவிருக்கும் ஒஸ்தி (யு தணிக்கை சான்றிதழ்) படத்துக்கும் ஏன் கிடைக்கக் கூடாது வரிவிலக்கு? உங்களிடத்தில் இந்த கோரிக்கை வைப்பதற்கு எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன் உரிமை. சன் டி.வி. படத்தை வாங்கி விநியோகம் செய்கின்ற படங்களை சில திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் தடை போடுவோம் என சொன்னார்கள். அதில்கூட இருந்திருக்கலாம் நியாயம். சன் டி.வி.க்கு டி.வி. உரிமையை கூட கொடுத்தால் கூட தடை போடுவோம் என்பதை முன்கூட்டியே முறைப்படி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அறிவிக்கவில்லை. நான் உறுப்பினராக இருக்கும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் அறிவிக்கவில்லை. வெளிப்படையாக ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தவில்லை. அப்படியிருந்தும் எங்கள் ஒஸ்தி படம் தணிக்கை செய்யப்பட்டு தேதியும் நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து விளம்பரம் செய்த நிலையில் இப்போது தடை என்றால் ஒரு தயாரிப்பாளரின் நிலையையும், ஒரு விநியோகஸ்தரின் கதியையும் எண்ணிப் பாருங்கள்.
திரைப்பட உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு கடன் பாக்கி என்றால் ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்படி காவல் துறையிடம்கூட முறையிட்டு சிலர் பலன் பெற்றிருக்கிறார்கள். அப்படியிருக்க, இனிமேல் சன் டி.வி.க்கு டி.வி. உரிமையை கொடுக்கும் படங்களுக்கு எதிர்காலத்தில் தடை போடுவோம் என்று சொல்லுங்கள். இப்பொழுது இந்தப் படத்துக்கு நிதி உதவியளித்த ரிலையன்ஸ் நிறுவனம் சன் டி.வி.க்கு டி.வி. உரிமையை விற்றிருக்கிறது. திரையரங்க உரிமையாளரோடு சன் டி.வி.க்கு பிரச்சினை என்றவுடன் சன் டி.வி.யை தீர்வு காணுங்கள். இல்லையேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடும் என்றுகூட அறிவித்திருக்கிறது. அதுவும்கூட ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருக்கிறது. அதையும் மீறி சன் டி.வி.யோடு திரையரங்க உரிமையாளர் சங்கம் போட்டுக் கொண்டிருக்கிறது குஸ்தி. அதில் இடையில் மாட்டி சிக்கித் தவிக்கலாமா ஒஸ்தி?
விளம்பர செலவோடு சேர்த்து பல கோடிகளுக்கும் மேல் விலை கொடுத்து வாங்கியிருக்கும் குறள் டி.வி.யின் நிலை என்ன? இந்த நாட்டிலே தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. விநியோகஸ்தர் சங்கம் இருக்கிறது. திரைப்பட உரிமையாளர் சங்கம் இருக்கிறது. பத்தும் பத்தாததற்கு போட்டி சங்கங்களும் இருக்கிறது. எல்லாம் இருந்தும் நாங்கள் எங்கே போய் கேட்க முடியும் நியாயம்? இத்தனை கோடி செலவு செய்த தயாரிப்பாளரும், பல கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கிய விநியோகஸ்தருமாகிய நாங்கள்தான் பட்டிருக்கிறோம் காயம்.
உலகிலேயே ஒசத்தி ஒரே சக்தி அது ஓம் சக்தி. வெளியிடுவதற்கு அவர் தருகிறார் யுக்தி. அந்த ஆண்டவன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட வேண்டும். இந்த படம் வெளியாகவிருக்கும் எட்டாம் தேதி திருவண்ணாமலை தீபம். அந்த அண்ணாமலையாரின் அருள் இருக்கும் வரை ஒஸ்திக்கு கிடைக்கும் உச்ச லாபம். இது ஒரு ஆன்மீகவாதியாகிய என்னுடைய நம்பிக்கை.
ஆண்டவன் தான் திறக்க வேண்டும் நடை, முதல்வர் ஜெயலலிதாதான் சொல்ல வேண்டும் நல்ல விடை, அதையும் மீறி யார் போடுவார்கள் தடை.
இவ்வாறு டி.ராஜேந்தர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


