எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று தி.மலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் வேளாண் உதவி இயக்குநர் அரக்குமார், தாசில்தார் ஆர்.ரவி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
குறைதீர்வு கூட்டம்
இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க வேண்டும், தேவையான இடுபொருட்கள் வழங்க வேண்டும், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து அதற்கான தொகையினை உடனுக்குடன் வழங்க வேண்டும், பயிர்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வறட்சி நிவாரண உதவி வழங்க அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்தில் பேசினர். இதேபோல கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசபாக்கம், போளூர், சேத்துப்பட்டு, ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய தாலுக்கா அலுவலகங்களிலும் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


