எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச். 15 - டி.ஜி.பி. லத்திகா சரண் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அ.தி.மு.க. புகார் தெரிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி சென்னையில் நேற்று அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அவரிடம் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், டாக்டர் மைத்ரேயன், பாலகங்கா, டி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அ.தி.மு.க. குழுவினர் சில புகார்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழக காவல்துறை டி.ஜி.பி. லத்திகா சரண் உயர்நீதிமன்ற கண்டனத்திற்கு உள்ளானவர். எனவே, தேர்தல் சமயத்தில் அவர் டி.ஜி.பி. பதவியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தினோம். இதேபோல், தமிழக உளவுத்துறை உயர் அதிகாரி ஜாபர்சேட் மற்றும் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருவதால் அவர்களையும் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இதேபோல் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் குழுவினர் கூறும்போது, தேர்தலில் பணம் கொடுக்க முயற்சி நடப்பதை உறுதியாக தடுக்க வேண்டும். பதற்றமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்று கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


