முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் ரூ.2.20 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணி அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமி பூஜையிட்டு பணியினை தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2018      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்றத்தொகுதி, பெரியபுலியூர் ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் மற்றும் வைரமங்கலம் ஊராட்சியில் குட்டிபாளையம் கிராமத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டடம் ஆகிய திட்டபணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  இன்று 25.03.2018 பூமி பூiஐயிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

 சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கே.சி.கருப்பணன்   பின்னர் தெரிவிக்கையில்

பவானி, பெரியபுலியூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் 3400 சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைய உள்ளது. மேலும் வைரமங்கலம் ஊராட்சியில் குட்டிபாளையம் கிராமத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 1.60 கோடி மதிப்பீட்டில் 11361 சதுர அடி பரப்பளவில் தரை தளத்துடன் கூடிய மூன்று அடுக்கு பள்ளி கட்டடத்தில் வகுப்பறைகள், ஆய்வகம், நூலகம் , கணினி அறை மற்றும் கழிப்பறைகள் என 12 அறைகளுடன் சிறப்பாக அமைய பெற உள்ளது.

 இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.என்.கிருஷ்ணராஜ், கோபி வருவாய் கோட்டாட்சியர் திரு.கோவிந்தராஜன், பொதுப் பணித்துறை (கட்டடம்) செயற் பொறியாளர் திரு.இளஞ்செழியன், முதன்மை கல்வி அலுவலர் திரு.பாலமுரளி உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து