முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உளுந்தின் மருத்துவ பயன்கள்

 1. உளுந்தம்பருப்பில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 2. உளுந்தம்பருப்பை  தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் கை கால் வலி மற்றும் மூட்டுவலி குணமாகும்.
 3. உளுந்து ஏராளமான கனிமங்களையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது.
 4. நமது இதய ஆரோக்கியத்திற்கு உளுத்தம் பருப்பு மிகவும் பயனளிக்கின்றன.
 5. எலும்பு ஆரோக்கியத்திற்கு மெக்னீசியம் மற்றும் கால்சியம் இன்றியமையாதவை. உளுத்தம் பருப்பில் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது,நமது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 6. உளுந்து  மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
 7. உளுந்து உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது. ஏனெனில், நார்ச்சத்துக்கள் பசியின்றி நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைத்திருக்கும்.
 8. உளுந்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
 9. உளுந்து இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது. மேலும், உளுந்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இவை ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், 
 10. பெண்கள் உளுத்தம் பருப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது.
 11. நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 12. கடுமையான மற்றும் கொடிய நோயின் பாதிப்பிலிருந்து விடுபட்டவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு மிகவும் நல்லது.
 13. உளுந்துடன் முட்டை மற்றும் பஞ்சுடன் சேர்த்து எலும்பு முறிவுச் சிகிச்சைக்கு கட்டுப்போடும் பழக்கம் நாட்டு மருத்துவத்தில் உண்டு. மேலும் உளுந்தில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது உடலினை அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது.
 14. உளுத்தம்பருப்பில் உள்ள புரதச்சத்தானது தசைகளின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் தசைகளை உறுதியானதாக மாற்றுகிறது. எனவே உளுந்தினை உண்டு ஆரோக்கியமான தசைகளைப் பெறலாம்.
 15. எண்ணற்ற பலன்கள் இந்த உளுத்தம் பருப்பில் இருப்பதால் இது நிச்சயம் உங்களுக்கு ஆரோக்கியமான உடலை பெற உதவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago