முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சர்க்கரை நோய் குணமாக | நீரிழிவு நோய் | Diabetes Cure & Treatment

siddha-3

சர்க்கரை கட்டுப்பட ;-- பாகற்காய் சாப்பிட்டு வந்தாலும்,சிறுகுறிஞ்சான் இலையை பொடி செய்து சாப்பிட்டாலும் கட்டுப்படும்.

சர்க்கரை வியாதிக்காரர்கள் ;-- மஞ்சளையும் அம்லா பவுடரையும் பாலில் கலந்து பருகி வர மிகுந்த பலன் அளிக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ;--நாவல் பழம்,பாவக்காய்,அவரைபிஞ்சு இவைகளை அடிக்கடி உணவுடன் சேர்த்துக்கொள்வது  நன்று.

சர்க்கரை நோய் தீர ;-- அத்திப்பாலில் வெண்ணெய்யை கலந்து சாப்பிட வேண்டும்.

சர்க்கரை வியாதி குணமாக;-- தினசரி 5 ஆவாரம்பூவை மென்று சாப்பிட்டு வரலாம்.

சர்க்கரை நோய் கட்டுப்பட ;-- கோவைப்பழம் தினசரி ஒன்று சாப்பிடவும்.

சர்க்கரை வியாதி தீர ;-- கொன்றைப்பூவை அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வரவும்.

சர்க்கரை நோய்னால் எற்படும்  எரிச்சல் குணமாக;-- மாவிளங்க இலையை அரைத்து உள்ளங்கால் மற்றும் கைகளில் பற்றுப் போடலாம்.

சிறுநீர் சர்க்கரை ;--வாரம் ஒரு நாள்  பாகல் இலை  சாரை 50 மில்லி சாப்பிட்டு வர குறையும்.

உப்பு சத்து சரியாக ;-- கரிசலாங்கண்ணி பொடி,வேப்பிலைப்பொடி,துளசிப் பொடி,கீழாநெல்லிப்பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து  காலை ஒரு ஸ்பூன்,மாலை ஒரு ஸ்பூன் சாப்பிடவும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்