முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பெண்ணை கோவை இளைஞர் கரம்பிடித்தார்

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Kovai 2025-08-29

Source: provided

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம் நவ இந்தியா பகுதியைச் சோந்த மோகன் - பிரேமலதா தம்பதியின் மகன் கௌதம் (30 வயது). இவர் கனடாவில் பள்ளி மற்றும் கல்லூரி என 11 ஆண்டுகள் பயின்றுள்ளார். கௌதம் தன்னுடன் கல்லூரியில் பயின்ற அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியைச் சோந்த ராப்ட் டக்ளஸ் பிராட் - எலினிட்டா யசன்யா பிராட் தம்பதியின் மகள் சாரா (30 வயது) என்பவருடன் பழகி உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற தங்களது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி இருவரும் கேட்டு உள்ளனர். மேற்படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் உறுதி அளித்த நிலையில், கௌதமும், சாராவும் பட்ட மேற்படிப்பை முடித்து கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் மணமகளின் பெற்றோர் தமிழ் கலாசாரத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதால் தங்களது மகளுக்கு தமிழ்நாட்டில், தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்ய விரும்பினர். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர்கள் கோவை வந்தனர். கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை காலை திருமண சடங்குகள் நடைபெற்றன. அப்போது சாராவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து கௌதம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழாவில் அமெரிக்கா, கனடா நாட்டைச் சேர்ந்த மணமகளின், உறவினர்கள் நண்பர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து