முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வியாழக்கிழமை, 25 ஜூன் 2015      தமிழகம்
Image Unavailable

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வர்தது அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து 18 ஆயிரத்து 900 கன அடியாக அதிகரித்தது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 25 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது தற்போது வினாடிக்கு 29 ஆயிரத்து 500 கன அடியாக அதிரித்துள்ளது. ஹாரங்கி அணைக்கு 2 ஆயிரத்து 755 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பலத்த மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகமண்டலாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள காவிரி கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பருவ மழை நீடித்தால் கபினி அணை விரைவில் நிரம்புவதற்கான வாய்ப்பு உள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் கபினி அணையில் இருந்து முதல் கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்டுள்ள 12 ஆயிரம் கன அடி தண்ணீர் நேரடியாக மேட்டூர் அணைக்கு வரும்.

கபினி அணையில் இருந்து 241 கிலோ மீட்டர் தூரத்திலும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 182 கிலோ மீட்டர் தூரத்திலும் மேட்டூர் அணை உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக 3 நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கர்நாடக மாநிலத்தில் உள்ள சங்கமம் என்ற இடத்தில் ஒன்றாக கலக்கிறது. அங்கிருந்து பிலிகுண்டுலூ வழியாக தமிழகத்தின் நுழைவு வாயிலான ஒகேனக்கல்லுக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து