முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு

புதன்கிழமை, 18 பெப்ரவரி 2026      தமிழகம்      வர்த்தகம்
Gold 2025-02-20

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,230-க்கு விற்பனையானது. வார தொடக்கம் முதல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,680 குறைந்துள்ளது.

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விலை சரிந்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் குறைந்து காணப்பட்டது. அதன்படி, 3 நாட்களுக்கு முன் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 440-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 320-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560-க்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில், சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,230-க்கு விற்பனையானது. வார தொடக்கம் முதல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,680 குறைந்துள்ளது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் நேற்று குறைந்து விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. 

கடைசி 5 நாட்கள் தங்கம் விலை:

1) 17-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,480.

2) 17-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560.

3) 16-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,520.

4) 15-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480.

5) 14-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து