எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கண்மூடித்தனமாக பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் அழிந்து வருகின்றன. அதன் தொடர் விளைவாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் சிக்கலை சந்திக்கிறது என சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை கூறுகிறது. கொல்கத்தா பல்கலைக் கழகத்தை சார்ந்த உயிரியல் ஆய்வாளர் பார்த்திபோ போஸ் என்பவர் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு இதனை தெரிவிக்கிறது.
மகரந்த சேர்க்கை
பெரும்பாலான தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது பூக்களில் மகரந்த சேர்க்கை வழி தான். இந்த மகரந்த சேர்க்கை என்பது ஒரு பூவிலிருந்து மற்றொரு தாவர பூவிற்கு மகரந்தம் செல்வது எனும் அயல் மகரந்த சேர்க்கை மற்றும் ஒரு தாவரத்தின் ஒரு பூவிலிருந்து அதே தாவரத்தின் மற்றொரு பூவிற்கு மகரந்தம் செல்வதுதான் மகரந்த சேர்க்கை என இரு வகைப்படும். இரண்டு வகை மகரந்த சேர்க்கையும் தானே நடைபெறாது, தாவரத்திற்கு மகரந்த சேர்க்கை நடைபெற்று இனப்பெருக்கம் செய்ய துணை தேவை.
காற்றே துணை
அரிசி, கோதுமை போன்ற புல் வகை தாவரங்களுக்கு, அதாவது தானிய விளைச்சல் தரும் தாவரங்களுக்கு காற்று தான் துணை. இவற்றின் பூக்கள் மிக சிறிதாய், கண்களுக்கு புலப்படத அளவில் இருக்கும். மென் காற்று வீசும் போது பூக்களின் மகரந்தம் அடித்து செல்லப்பட்டு அடுத்த தாவரத்தில் படியும். இவ்வாறு இந்த வகை தாவரங்களில் மகரந்த சேர்க்கை இயல்பில் நடைபெறும். காற்றுதான் இந்த வகை தாவரங்களுக்கு துணை.
பூச்சிகளின் உதவி
ஆனால் வேறு பல தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடைபெற பூச்சிகளின் உதவி தேவை. பொதுவாக தேனீ, வண்டு, பட்டாம் பூச்சி என பல்வேறு வகை பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. பூவில் தேன் குடிக்க வரும் தேனீ அதன் கால்களில் மகரந்தத்தை எடுத்துச் சென்று மற்றொரு பூவில் அமரும்போது அந்த பூவில் மகரந்தத்தை செலுத்துகிறது. இவ்வாறு மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. அயல் மகரந்த சேர்க்கை, தன் மகரந்த சேர்க்கை இரண்டிற்கும் பூச்சியினம் இன்றியமையாதது.
பெருமளவு தானிய பயிர்களுக்கு பூச்சிகளின் மகரந்த சேர்க்கைக்கு அவசியமில்லை என்றாலும், பல்வேறு காய்கனிகள் பயிர் செய்ய தேனீயின் உதவி அவசியம். பூசணி, பரங்கி, வெள்ளரிக்காய் என பல்வேறு காய்கனி தாவரங்கள் விளைச்சல் தர பூச்சிகள் அவசியம். தன் மகரந்த சேர்க்கை ஏற்படும் கத்தரிக்காய் போன்ற தாவரத்திலும், உள்ளபடியே அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்றால் சூல் கொள்ளுதல் மிகுந்து அதிக பூ, காய் தரும். எனவே மகசூல் அதிகரிக்கும்.
அழியும் பூச்சி இனம்
வகை தொகை இல்லாமல் பூச்சிமருந்து பயன்படுத்துவதால் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சியினம் அழிந்து இந்தியாவில் விளைச்சல் மட்டுபட்டுள்ளது என பார்த்திபோ போஸ் அவர்களின் ஆய்வு தெரிவிக்கிறது. மேலை நாடுகளில் தேனீ வளர்ப்பு என்பது பரவலாக நடைபெறுகிறது. எனவே இதுகாறும் செயற்கையாக வளர்க்கப்படும் தேனீக்கள் அருகில் உள்ள வயல் வெளிகளில் மகரந்த சேர்க்கைக்கு உதவி விளைச்சலை பெருக்கி வந்தது. சமீபத்தில் அங்கு பெருமளவு செயற்கை தேனீ கூடுகள் பாதிக்கபட்டு தீடீர் என தேனீக்கள் மடிந்தன. இதன் தொடர்ச்சியாக அங்கு சமீப ஆண்டுகளில் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. ஐரோப்பா அமெரிக்க முதலிய நாடுகளைப் போல செயற்கை தேனீ வளர்ப்பு இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இல்லை. எனவே இங்கு இயற்கை தேனீ மற்றும் பூச்சிகள் பயிர் தொழிலுக்கு மிக அவசியம்.
ஒவ்வொரு ஆண்டும் பூச்சியினத்தின் நிலை அறிந்து, அந்த ஆண்டு ஏற்படும் காய்கனி விளைச்சலை அதனுடன் ஒப்பிட்டு பார்த்து ஆராய்வது தான் சால சிறந்தது. பூச்சிகள் குறையும் போது விளைச்சல் குறைகிறது. பூச்சிகள் பெருகும் போது விளைச்சல் கூடுகிறதா? என அறியமுடியும். ஆனால், இந்தியாவில் பூச்சியினங்களின் நிலை குறித்த ஆய்வு விவரங்கள் இல்லை. எனவே நேரடியான ஆய்வு சாத்தியமில்லை. இதன் காரணமாகத்தான், நேரடியான ஆய்வுக்கு பதிலாக மறைமுக ஆய்வு நடத்த திட்டமிட்டனர்.
விளைச்சல் பாதிப்பு
தமது ஆய்வுக்காக பூச்சியினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரம், மற்றும் காற்றினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரம் இரண்டையும் எடுத்துக் கொண்டனர். நவீன விவசாய முறையில், பூச்சிகொல்லி, வேதி உரம் முதலியன இட்டு பயிர் தொழில் செய்யும் போது, இடு பொருள் கூட கூட காற்றினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் பயிர்களில் விளைச்சல் உயர்ந்துகொண்டே சென்றது. மண் தன் செழிப்பை இழப்பது போன்ற காரணங்களினால் விளைச்சல் விகிதம் சற்றே குறைந்தாலும், மொத்த விளைச்சல் கூடியது. ஏக்கருக்கு பயிர் விளைச்சல் தரும் மகசூல் கூடியது.
ஆனால் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை ஏற்படும் பயிர்களில் பூச்சிமருந்து வேதி உரம் முதலிய முதலில் விளைச்சலை பெருக்கினாலும், காலப் போக்கில் விளைச்சல் பெருகவில்லை. ஏக்கருக்கு மகசூல் குறைந்தது என்பது புலனாகியது. அதாவது, வேதி பொருள் கொண்டு நடத்தப்படும் விவசாயத்தினால் பூச்சிகள் பாதிக்கப்பட்டு விளைச்சல் மட்டுப்பட்டது என்பது குறிப்பால் விளங்கியது.
விவசாயத்தில் நேரடியாக புலப்படும், நீர், மண், பாதிப்பு தரும் பூச்சி தொல்லை முதலியவை தவிர கண்களுக்கு புலப்படாத மகரந்த சேர்க்கையும் முக்கியமானது என இந்த ஆய்வு நமக்கு தெரிவிக்கிறது. உலகில் சுமார் 146 நாடுகளின் 90 சதவிகித உணவு தேவையை பூர்த்திசெய்யும் நூறு தாவரங்களில் எழுபத்தொன்று தாவரங்கள் பூச்சியினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரங்கள் ஆகும். இதிலிருந்து மகரந்த சேர்க்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 7.5 டன் காய்கனி உற்பத்தியாகிறது. உலக காய்கனி உற்பத்தியில் இது 14 சதவீதம் ஆகும். சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் 2-வது இடத்தில் உள்ள நாடு இந்தியா. மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சியினங்கள் அருகினால் இந்திய விவசாயம் பெருமளவு பதிக்கப்படும் என்பது திண்ணம். உணவு உற்பத்தி குறைந்தால் உணவு பாதுகாப்பு மட்டுப்படும் பஞ்சநிலை ஏற்படலாம் என அறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –06-02-2026
06 Feb 2026 -
நெல்லை வடக்குபச்சையாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
06 Feb 2026நெல்லை, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்குபச்சையாறு அணையில் இருந்து இன்று முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வ
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
06 Feb 2026சென்னை, தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான்: மசூதியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல் 31 பேர் பலி - பலர் படுகாயம்
06 Feb 2026இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பலியானார்கள் மேலும் இதில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்
-
மியான்மரில் நிலநடுக்கம்
06 Feb 2026நைப்பியிடா, மியான்மரில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நேபாளத்தில் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
06 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் திருமணத்திற்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
-
பாக்.கில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
06 Feb 2026லூகூர், பாகிஸ்தானின் வடமேற்கு கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் இரண்டு தனித்தனி உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் 24 பயங்கரவாதிகள் சுட்
-
தருமபுரி: வாணியாறு அணையில் 55 நாள்களுக்கு நீர் திறக்க உத்தரவு
06 Feb 2026தருமபுரி, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூற
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மின்னஞ்சலில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்
06 Feb 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க த.வெ.க.
-
'புராஜெக்ட் வால்ட்' திட்டம் மூலம் பாகிஸ்தானில் 13 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அமெரிக்கா முடிவு
06 Feb 2026நியூயார்க், 'புராஜெக்ட் வால்ட்' என்ற திட்டத்தின் மூலம், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கங்களை மேம்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
-
தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
06 Feb 2026சென்னை, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
-
சிங்கப்பூரில் ரூ. 1.9 கோடி மோசடி: இந்திய வம்சாவளிக்கு சிறை
06 Feb 2026சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.
-
பீகார் தேர்தல் முடிவை எதிர்த்த பிரசாந்த் கிஷோர் கட்சி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
06 Feb 2026பாட்னா, பீகார் தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த பிரசாந்த் கிஷோர் கட்சியின் மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து தள்ளுபடி செய்தது.


