முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் ரூ. 1.9 கோடி மோசடி: இந்திய வம்சாவளிக்கு சிறை

வெள்ளிக்கிழமை, 6 பெப்ரவரி 2026      உலகம்
Jail-1

சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணை ஏமாற்றி ரூ. 1.9 கோடி மோசடி செய்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு 23 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிங்கப்பூரில், 2021 ஆம் ஆண்டில் இணையத்தில் பிஎஸ்4 எனும் விடியோ கேமை தேவேந்திரன் இளங்கோவன் (31) என்பவர் விளம்பரம் செய்தார். இந்த விளம்பரத்தைக் கண்ட 25 வயதான பெண் ஒருவர், அதனை ஆர்டரும் செய்தார். இதனைப் பெறுவதற்கு முன்னதாக வைப்புத்தொகையாக 150 சிங்கப்பூர் டாலரை செலுத்துமாறும், மீதத் தொகையை டெலிவரியின்போதும் செலுத்துமாறும் தேவேந்திரன் கூறியுள்ளார்.

தொடர்ந்து, மொபைல் எண்களை இருவரும் பகிர்ந்து கொண்டநிலையில், பெண்ணை மேலும் பணம் செலுத்துமாறு தேவேந்திரன் கூறியுள்ளார். இருப்பினும், பிஎஸ்4-ஐ தேவேந்திரன் வழங்கவில்லை. இதனையடுத்து, தேவேந்திரன் குறித்து காவல் நிலையத்தில் மோசடி புகாரும் அளித்தார்.

இந்த நிலையில்தான், தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட தேவேந்திரனுக்கு 23 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின்போதே, 1,04,000 சிங்கப்பூர் டாலரை (சுமார் ரூ.74 லட்சம்) இரு தவணையாக தேவேந்திரன் செலுத்தியும் விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து