முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி:- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேற்று “சர்வதேசமகளிர் தினம்” கொண்டாடப்பட்டது.  மகளிரியல் துறை மற்றும் மகளிரியல் மையம் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தது.
 அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை பேரா.கா.மணிமேகலை தமது வரவேற்புரையில ,உலக ம

களிர் தின நாளை ஆணாதிக்க சமூகத்தில், பெண்களின் உழைப்பிற்கான மரியாதையை வென்றெடுத்தநாள் இது என குறிப்பிடவேண்டும் என்றார்.  “கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ? பெண்களறிவை  வளர்த்தால் வையம் பேதமையற்றிடுங் காணீர்!”என்று பாரதியின் கூற்றுக்கிணங்க பாலின சமத்துவசமுதாயம் அமைய வேண்டும் என்றார். பாரதி கண்டகனவை நனவாக்குவதற்கும், சமூகத்தில் பெண்கள் உயரியநிலையை அடைவதற்கும் ,உரிமைகளைகேட்டு பெறுவதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
   அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையாஅவர்கள் தமது தலைமை உரையில், மகளிர் தினம் என்பது ஆண்களை சாடுவதற்காக அல்ல. புhலின சமத்துவத்தையும் சமநீதியையும் உறுதிப் படுத்துவதற்காகவே கொண்டாடப்படுகிறதுஎன்றார். ஆண்களை மதிக்கக்கூடிய பெண்கள் தான் சமூகத்தில் உயர்ந்துள்ளனர் என்றும், பெண்களைமதிக்கக் கூடிய ஆண்கள் தான் வளர்ந்திருக்கி

ன்றனர் என்றும் குறிப்பிட்டார்.  பெண்கள் வெற்றி பெரும் போது முதலில் அதை பாராட்டக் கூடியவர்வர்கள் ஆண்களாகத்தான் இருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய வளர்ச்சிக்கு ஆண்களின் பங்கை பயன்படுத்துவது மிகவும் அவசியமானது. ஆண்களுக்குப் பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மதிப்பு அளிக்க கூடியவர்களாக இருக்கவேண்டும். நமதுகலாச்சாரமும், பண்பாடும், வரலாறும் பெண்களை மதிக்கிறது.  அதனால், நமது கலாச்சாரத்தையும் ,பண்பாட்டையும்  சேதப்படுத்தாமல் கிடைக்கின்ற வளர்ச்சியே உண்மையான நிலையான வளர்ச்சிஎன்றார்.
 ஒரு ஆணின் வெற்றியிலும் பெண்ணின் பங்களிப்பு உள்ளது.

ஆகவே ஒரு ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ எதிரியாக பார்க்கக் கூடிய கருத்து முற்றிலும் மாறவேண்டும். தன்னுடைய வளர்ச்சிக்கு ஆண்களை பயன்படுத்திய பெண்களே முழுமையான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். அதுதான் ஒரு ஆரோக்கியமான வெற்றியாகவும், முன்னேற்றமாகவும் இருக்கமுடியும்.  மேலும் அவர்குறிப்பிடுகையில், வாழ்க்கை என்பது எத்தனைவருடம் வாழ்கிறோம் என்பது முக்கியமில்லை, எத்தனைநாட்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்பதே முக்கியம்.  தன்னுடைய மகிழ்ச்சியை ஆணும், பெண்ணும் பகிர்ந்துகொண்டால் இச்சமூகம் ஆரோக்கியமாக இருக்கும். யார் ஒருவர் சமூகத்தோடு ஒத்துபோகிறார்களோ, மேலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக் கூடியவர்களாக  இருக்கிறார்களோ அவர்களே வெற்றியைக் காண்கிறார்கள். அழகப்பாபல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு ஒவ்வொருதுறையிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது என்று அவர் தெரிவித்தார்.
மகளிர் தினத்தை முன்னிட்டுபல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
 மகளிரியல் மையத்தின் உதவிப் போராசிரியை முனைவர். வீ.வீரமணி நன்றி கூறினார். இவ்விழாவில் 600-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகத்தின் உறுப்புகல்லூரி மாணவமாணவிகள் ,பேராசியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவ,மாணவிகள், கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்