எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தமிழகத்தில் பருவமழை பொய்த்து கடுமையான வறட்சி ஏற்பட்ட நிலையிலும், தென் இந்தியாவிலேயே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பேரீச்சை பழம் உற்பத்தியில் தனி முத்திரை பதித்து சாதனை படைத்து வருகிறார்.
உலக அளவில் இங்கிலாந்து, கலிபோர்னியா, இஸ்ரோல், அபுதாபி ஆகிய நாடுகளில் மட்டுமே அதிகளவு பர்ரி பேரீச்சை உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தாவரவியல் ஆய்வுக்கூடங்களில் திசுமூலமாக உற்பத்தி செய்து, பல்வேறு நிலைகளில் சுமார், 3 ஆண்டுகள் வரை ஆய்வகத்தில் வளர்க்கப்படுகிறது. பின்னர், சீதோஷ்ன இயற்கைக்கு ஏற்ப பக்குவப்படுத்தி ஓராண்டு வரை பசுமை குடிலில் வளர்க்கப்பட்டு, நன்கு திரட்சியான பிறகே செடிகள் விற்பனைக்கு வருகிறது. அதை வாங்கி நடவு செய்த இரண்டு ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். தொடங்கி முதல் வருடத்திலேயே ஒவ்வொரு செடியிலும் முதல், 50 கிலோ வரை காய்க்கும். மூன்றாண்டு பருவத்தில், 100 கிலோ வரையும், ஐந்தாண்டு பருவத்தில், 100 கிலோ முதல், 300 கிலோ வரை காய்க்கும் தன்மை கொண்டது.
மேலும், பேரீச்சை பழங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், அஜ்வால், பர்ரி பேரீச்சை அதிக சதைப்பற்றும், ருசித்தன்மையும் உள்ள முக்கிய ரகங்களாக உள்ளன. இதுபோன்ற பேரீச்சை ரகங்கள் வெளிநாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த, 23 ஆண்டுகளாக தமிழகத்தில், தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்து அரியகுளத்தை சேர்ந்த நிஜாமுதின் விவசாயி ஒருவர் பேரீச்சை பழம் உற்பத்தியில் ஈடுபட்டு தனிமுத்திரை பதித்துள்ளார்.
இது குறித்து விவசாயி நிஜாமுதின் கூறியதாவது: தென் இந்தியாவிலேயே முதன்முதலில், தருமபுரி மாவட்டம், அரியகுளம் பகுதியில் தான் பேரீச்சை உற்பத்தி துவங்கப்பட்டது. கடந்த, 1982 முதல், 1990 வரை சவுதிஅரேபியாவில், வேளாண் பயிற்சிகூடத்தில் பணியாற்றி வந்தேன். பின்னர், இடையில் அரியகுளம் பகுதியிலுள்ள என்னுடைய சொந்த நிலத்தில் பர்ரி பேரீச்சை செடி நாற்றுவிடப்பட்டு மீண்டும், சவுது அரேபியாவிற்கு சென்றேன். அதைதொடர்ந்து, இங்கு 1991ல் பேரீச்சை செடி நடவு செய்யும் பணியை துவங்கினேன். தற்போது, ஒரு ஏக்கருக்கு, 76 செடிகள் நடப்பட்டு, 13 ஏக்கரில், 630 பேரீச்சை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கான உற்பத்தி செலவும் குறைவு தான். சென்றாண்டு மட்டும், 15 டன் பேரீச்சை உற்பத்தி செய்யப்பட்டது. இது ஒவ்வொறு ஆண்டும் உற்பத்திறன் பெருகிகொண்டே இருக்கும்.
இங்கு, பர்ரி, கண்ணிந்தி, அஜ்வால், ரூஸ், மிஜ்னாஸ், கத்தாவி, கலாஸ், அலுவி, ஜகிதி, சிலி உள்ளிட்ட, 32 ரக பேரீச்சை சாகுபடி செய்கிறேன். பெரும்பாலும், ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் மரங்களில் பூ பூக்கும். ஜூன்- ஜூலை மாதம் நல்ல தரமான பேரீச்சை பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது. பேரீச்சை குறைந்தபட்சம், 100 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரையும், செடி ஒன்று, 3,576 ரூபாய்க்கு வற்க்கப்படுகிறது. இதற்கான சாகுபடி காலம், ஆறு மாதம் மட்டுமே. மீதமுள்ள ஆறு மாதங்கள் மரங்கள் பராமரிக்கப்படும். நிலத்தில், குறைந்த ஈரப்பதம் இருந்தாலே உற்பத்திக்கு போதுமானது. தவிர, ஆட்கள் கூலி, பராமரிப்பு செலவு எதுவும் கிடையாது. விவசாயிகள் இந்த செடிகள் வளர்ப்பது குறித்து நன்கு தெரிந்து கொண்டு கையாண்டால், குறைந்த செலவில் அதிக வருவாய் பெறலாம். அதேபோல், வறட்சியிலும், நன்கு வளரக்கூடிய தன்மையும் கொண்டது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்ட நிலையில், தென்னை, மா, வாழை காய்ந்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பேரீச்சை உற்பத்தி இதற்கு மாற்றாக செழிப்படைந்துள்ளது. மேலும், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பேரீச்சை வளர்ப்பில் அரசு மானியம் அளிக்கிறது. குஜராத்தில், 35 சதவீதமும், ராஜஸ்தானில், 90 சதவீதம் அந்த அரசு மானியம் வழங்கின்றன. அதேபோல், தமிழக அரசும், பேரீச்சை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –30-01-2026
30 Jan 2026 -
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
போராட்டங்கள் இயல்பாக நடக்க வேண்டும்: தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் கருத்து
30 Jan 2026சென்னை, தற்காலிக ஊழியர்களை போராட தூண்டி விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்
-
பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வாருங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு
30 Jan 2026மாஸ்கோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரம் நிறுத்த புதின் சம்மதம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Jan 2026நியூயார்க், உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்துக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதியன் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்பு
30 Jan 2026சென்னை, கொலை செய்து வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
-
அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
30 Jan 2026நியூயார்க், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
-
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
30 Jan 2026டாக்கா, வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: காங்கிரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி
30 Jan 2026நெல்லை, தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி.
-
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
30 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரண்
30 Jan 2026ராஞ்சி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் நேற்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.
-
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
30 Jan 2026சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா அரசு
30 Jan 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் க
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லக்கில் நாட் கதிரறுப்பு விழா.
- நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் வருசாபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
30 Jan 2026


