முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2026      தமிழகம்
KN-Naru 2025-10-08

சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “சட்டமன்றத் தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும், கருத்துக் கணிப்புகளும் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் உறுதியெடுத்துவிட்டதை காட்டுகின்றன. ஒரு பத்திரிகை எழுதியிருந்த ஆய்வுக் கட்டுரையும், இன்னொரு பத்திரிகை வெளியிட்ட கருத்துக் கணிப்பும் அதனை மெய்பிக்கின்றன.  பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், தி.மு.க. முன்னணியில் உள்ளது’ என தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. 

அதில், சிறுபான்மையினர் மத்தியில் அதி.மு.க.வின் அங்கீகாரம் சரிந்துள்ளது என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 70 முதல் 80 சதவீத சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற்று கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் என்றும் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர் என தெரிவித்திருக்கிறார்கள். இன்னொரு பத்திரிகையும் சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கிறது.

அதில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் இடம்பெற்றிருக்கும் இண்டியா கூட்டணி 45% ஆதரவோடு முன்னிலையில் இருக்கிறது என தெரிவித்திருக்கிறது. அதி.மு.க. இடம்பெற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 33 சதவிகித ஆதரவுதான் இருக்கிறது. வித்தியாசம் 12சதவீதம்  என்பதால் தொட முடியாத உயரத்தில் தி.மு.க. கூட்டணியை மக்கள் உயர்த்திப்பிடிக்கின்றனர். முதல்வரின் தலைமையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறும் கூட்டணியாக தி.மு.க. அணி இருக்கிறது. 2026 தேர்தலிலும் தி.மு.க. வெல்லும். அதனை கருத்துக் கணிப்புகளும் உறுதி செய்கின்றன.

தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெண்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று அசைக்க முடியாத அரசாக விளங்குகிறது திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள். தங்களுக்காக உழைக்கின்ற, தங்களுக்காக திட்டங்களை உள்ளன்போடு, உயர்த்தும் நோக்கத்தோடு செயல்படுத்தும் திராவிட மாடல் அரசே தொடர வேண்டும் எனும் தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள். 45 சதவீதம் என்பதே கூட மிகக் குறைவான கணக்குதான் என்பதை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. அடையப் போகும் வரலாற்று வெற்றி நிரூபிக்கும். அதற்கு தி.மு.க. ஆட்சியில் பயன்பெறும் பெண்கள்தான் மகுடம் சூட்டுவார்கள்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து