LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கறவை மாடுகளில் பால் உற்பத்தியைப் பெருக்க நல்ல தீவனம், காற்று வசதி, நோய் தடுப்பு முறைகள், இயற்கை சார்ந்த சூழல் ஆகியவை முக்கியமாகும். கறவை மாடு வளர்ப்பு பல சோதனைகளையும் கடந்து பண்ணையாளர்களுக்கு தினசரி தொடர் வருமானத்திற்கு இன்றளவும் உதவியாய் இருக்கிறது. பண்ணையளவில் பொருளாதாரம் சார்ந்த இடர்கள் பலவும் இருந்தாலும், நோய்கள் ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில் நோய் வராது தடுக்க நாம் பெரும் முயற்சி எடுக்க வேண்டும்.
கறவை மாடுகளை வாங்கும்போது மடி மற்றும் காம்புகளின் தன்மையை அறிந்து வாங்க வேண்டும். மாடுகளை கழுவி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சில நேரங்களில் கறவை முறையின் காரணமாகவும், காய்ந்த நிலையில் பால் கறப்பதினாலும் மடிக்காம்புகளில் வெடிப்பு மற்றும் காயங்கள் ஏற்படும்.
கறவை மாடுகளில் மடிசார்ந்த நோய்கள் : நோய்கள் பல இருந்தாலும் ஒரு சில நோய்கள் பொருளாதார இழப்பு அதிக அளவில் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதில் மிகவும் பொருளாதார முக்கியத்துவம் கொண்டது கறவை மாடுகளின் மடி சார்ந்த நோய்களாகும். இதுபற்றிய விழிப்புணர்வு பண்ணையாளருக்கு அவசியம் பல ஆராய்ச்சி முடிவுகளின் படி கறவை மாடுகளில் 50 விழுக்காடு நோய்கள் மடி சார்ந்தவையாக இருப்பது அறியப்படுகிறது.
மடிசார்ந்த நோய்கள் : மடிநோய் என்பது பெரும்பாலும் தொற்றுநோயாக இருக்கும்.
சில நேரங்களில் மடிக்கட்டும் ஏற்படும். மடியின் முன்புறம் முன்கால்கள் வரை நீர் கோர்த்துக் காணப்படும். கோடை மற்றும் மழைப் பருவம் மாறும் சூழலிலும், கோமாரி (கசப்பு) நோய் கண்ட மாடுகளிலும் சுகாதாரக் குறைவான கறவை முறைகளிலும் மடியில் அம்மைக் கொப்புளங்கள் காணப்படும். தலை ஈத்து மாடுகளிலும், முறையற்ற முரட்டுத்தனமான கறவைப் பழக்கம் உள்ள பண்ணைகளிலும் மடிக்காம்பில் வெடிப்பு மற்றும் காயங்கள் காணப்படும்.
மடிநோயின் அறிகுறிகள் : மடிநோய் உள்ள மாடு, மடி வீங்கி அல்லது கல்போல இருக்கும். கை வைத்தால் காலைத் தூக்கும். உதைக்கும். பாலில், வெள்ளை நிறம் தவிர வேறு எந்த நிறம் (மஞ்சள், இளஞ்சிவப்பு) கண்டாலும் அது மடிநோய் எனலாம். அது போலவே பாலில் ஏதேனும் திரி அல்லது நூல் போல பொருள் தென்பட்டாலும் மடிநோய் தான். பாலை, நாவின் நுனியில் ஒரு சொட்டு வைத்துச் சுவைத்தால் அதில் சிறிது உப்புச்சுவை இருந்தால் மடிநோய் இருக்கலாம். இரண்டு ஈற்றுக்கு மேலே உள்ள மாடுகளில் கன்று ஈன்றவுடன் மடிநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
கறவை மாடுகளில் மேற்கண்ட எந்த அறிகுறிகள் தனித்தோ அல்லது கலந்தோ காணப்படும் சூழலில் அதை மடிநோய் என்று மனதில் கொண்டு உடன் முதலுதவி செய்வது நலம். பெரும்பாலான நேரங்களில், உடன் மருத்துவ உதவி கிடைக்காத போது நோயின் தன்மை தீவிரமடைந்து பாதிப்பு அதிகமாகும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
மடிநோய்க்கான மரபு சார்ந்த மூலிகை முதலுதவி குறிப்புகள் : முதலில்,மடிநோய் கண்ட மாடுகளின் மடியினை நீர்விட்டு தேங்காய் நார் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். பிறகு அனைத்து காம்பு மற்றும் மடி பகுதியினையும் நன்றாக கைகளால் பிசைந்து பாலைக்கறந்து விடவும். மடியில் நீர் ஈரம் காயும் முன்பு கீழ்க்கண்ட முறையில் விளக்கப்படும் மருந்தினை முறையாகப் பயன்படுத்தவும். சோற்றுக்கற்றாலை மடல் - எடை 250 கிராம்(ஒன்று அல்லது இரண்டு) (முழு மடல்) மஞ்சள் தூள் - எடை 50 கிராம் (சமையலுக்கு பயன்படுவது) (ஒரு சாம்பார் கரண்டி அளவு)
சுண்ணாம்பு - எடை 20 கிராம்(வெற்றிலைக்கு போடுவது) (ஒரு கொட்டைப்பாக்கு அளவு)
சோற்றுக்கற்றாழை ஒன்று அல்லது இரண்டு மடல் (250 கிராம்) எடுத்து, தோலுடன் முழுதாக சிறு சிறு துண்டுகளாக அரிந்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். மஞ்சள் தூள் (50 கிராம்) எடுத்து அந்த பாத்திரத்தில் போடவும். பிறகு சுண்ணாம்பு (20 கிராம்) சேர்த்து இந்த மூன்று பொருட்களையும் ஒன்று சேர்த்து மின்அரவை இயந்திரம் அல்லது ஆட்டு கல்லில் மை போல அரைத்துக் கொள்ளவும். இந்த மூலிகை மருந்துக் கலவை ஒரு மாட்டிற்கு ஒரு நாள் முழுவதும் தடவ வேண்டிய அளவாகும்.
மடியில் மருந்து தடவும் முறை : முதலில், கூறியுள்ள படி நோய் கண்ட மாடுகளின் மடியினை தேய்த்துக் கழுவி அனைத்து காம்பு மற்றும் மடி பகுதியினையும் நன்றாக கைகளால் பிசைந்து பாலைக்கறந்து மடியின் நீர் ஈரம் காயும் முன்பு மேற்கண்ட மருந்தினை முறையாகப் பயன்படுத்தவும்.
ஒரு கை அளவு மேற்கண்ட மூலிகை மருந்துக் கலவையை ஒரு குவளையில் இட்டு அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து நன்கு கைகளால் கரைத்து மடியின் அனைத்து பகுதியிலும் கைகளால் தேய்த்து விடவும். தேய்க்கும்பொழுது கீழே மருந்து சொட்ட வேண்டும். கெட்டியாக தடவக்கூடாது. இந்த மருந்துக் கலவையை ஒரு நாளைக்கு, எட்டிலிருந்து பத்து முறை தடவ வேண்டும். ஒவ்வொரு முறை மருந்து தடவும் முன்பும் மடியில் நீர் தெளித்து நன்கு மடியினைக் கழுவி பாலைக் கறந்து விடவும். ஒரு நாளைக்கு பத்து முறை தடவ மேற்குறிப்பிட்ட மூலிகை மருந்துக் கலவை போதுமானது. இந்த முதலுதவி மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டும்.
2.2. மடிக்காம்பு வெடிப்பு : கறவை மாடுகளின்மடியில் காயம் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டால் மூலிகை முதலுதவி செய்வதன் மூலம் கறவை மாடுகளில் பொருளாதார இழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். முதலில் மடியைக் கழுவி கீழ்க்கண்ட முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.
ஒரு லிட்டர் சுத்தமான நீரில் ஒரு கரண்டி (5 கிராம்) மஞ்சள்தூள் மற்றும் ஒரு கரண்டி (5கிராம்) கல்உப்பு கலந்து நீரை கொதிக்க வைத்து ஆறியவுடன் மடி மீது தெளித்து சுத்தமாகக் கழுவ வேண்டும். மேற்கூறிய நீரில் கழுவிய மடி மற்றும் காம்பு பகுதியை நன்கு உலர்ந்த சுத்தமான பஞ்சு துணியினால் ஈரம் உறிஞ்சும்படி ஒற்றித் துடைக்க வேண்டும்.
தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : மஞ்சள் தூள் 10 கிராம், பூண்டு 4 பல், குப்பைமேனி 10இலை, வல்லாரை 10 இலை, வெண்ணெய் 50 கிராம்.
செய்முறை : மேற்கண்டப் பொருட்களை வெண்ணெய் நீங்கலாக ஒன்று சேர்த்து அரைத்து, நீர் மற்றும் கை படாமல் ஒரு கரண்டியில் வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வெண்ணெய் கலந்து கொள்ளவும். இதை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். மறுநாள் புதியதாக மருந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை : மடிக்காம்பில் காயம் மற்றும் வெடிப்பு ஏற்பட்ட கால்நடைகளுக்கு மேற்கூறிய முறையில் மடிப்பகுதியை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துணியால் துடைத்து மேற்கூறிய மருந்து கலந்து வெண்ணெய்யை கையில் எடுத்து வெடிப்பு மற்றும் காயம் உள்ள பகுதிகளில் மென்மையாக தடவி விடவும்.
மாடுகள் கீழே படுத்து எழும்போது மடி மற்றும் காம்புப் பகுதிகள் அழுக்காகி விடும். எனவே இந்த மருந்தினை மடி மற்றும் காம்புப் பகுதியை சுத்தம் செய்து கறவை செய்யும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் மேற்கூறிய மருந்தை பலமுறை தடவி விட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் மடியில் உள்ள காயம் மற்றும் வெடிப்பு உள்ள பகுதிகள் காய்ந்த நிலையில் இருக்கக் கூடாது. மருந்து எந்த நேரமும் காயம் மற்றும் வெடிப்பு உள்ள பகுதிகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
2.3. மடி அம்மை ; கறவை மாடுகளில் மடி அம்மைக் கொப்புளங்கள் ஏற்பட்டால் அதன் பாதிப்பால் சரியாக பால் கறக்கப்படாமல் மடிநோய் ஏற்பட வாய்ப்புண்டு.
கோமாரி, வாய் சப்பை நோய் கண்ட மாடுகளில் பல கால் நடைகளில் அம்மைக் கொப்புளங்கள் காணப்படும். இந்த அம்மைக் கொப்புளங்கள் சிறியதாக இருக்கும் போது சரியாகக் கவனித்து மருத்துவம் செய்யாவிட்டால் பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.
தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : திருநீற்றுப் பச்சிலை 10 இலை, துளசி 10 இலை, வேப்பிலை கொழுந்து , 10 இலை, பூண்டு 4 பல், மஞ்சள் தூள் 10 கிராம், வெண்ணெய் 50 கிராம்.
செய்முறை : மேற்கண்ட பொருட்களை வெண்ணெய் நீங்கலாக ஒன்று சேர்த்து அரைத்து நீர் மற்றும் கை படாமல் ஒரு கரண்டியில் வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வெண்ணெய் கலந்து கொள்ளவும். இதை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். மறுநாள் புதியதாக மருந்து அரைத்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை : மடி காம்பில் அம்மை ஏற்பட்ட கால்நடைகளுக்கு மேற்கூறிய முறையில் மடிப்பகுதியை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துணியால் துடைத்து மேற்கூறிய மருந்து கலந்த வெண்ணெய்யை கையில் எடுத்து அம்மை உள்ள பகுதிகளில் மென்மையாகத் தடவி விடவும்.
2.4. மடிநீர்க்கோர்வை : மடிமுன்பகுதி நீர்க்கோர்வை : அதிக பால் கறக்கும் இளம் கறவை மாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் ஈற்றுகளில் சில மாடுகளில் மடியின் முன் பகுதி முன்னங்கால் வரை நீர் கோர்த்து கொண்டு மாடுகளுக்கு அயர்ச்சியைக் கொடுக்கும். ஒரு சில நேரங்களில் கன்று ஈன்றுவதற்கு முன்பாகவும் மடிநீர்க் கோர்வைக் காணப்படும். இந்நிலை கண்ட கன்று ஈன்ற மாடுகளில் நாள் ஒன்றுக்கு சில முறை கூடுதலாக பால் கறப்பதன் மூலமும், கன்றுகளைக் கூடுதலாக ஊட்ட விடுவதன் மூலமாகவும் இந்நிலையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : பூண்டு 10 பல், மஞ்சள் தூள் 50 கிராம், நல்லெண்ணெய் 300 மிலி.
செய்முறை : நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து இளம் சூட்டில் 10 பல் பூண்டினை அரைத்து மஞ்சள் தூளை சேர்த்து போடவும்.
பயன்படுத்தும் முறை : எண்ணெய் சூடு ஏறியவுடன் பாத்திரத்தை இறக்கி வைத்து நீர்க்கோர்வை உள்ள பகுதிகளில் ஈரம் இல்லாமல் சுத்தமான பஞ்சு துணியினால் துடைத்து நன்கு உலர்ந்த நிலையில் 100 மிலி அளவு மருந்து கலந்து நல்லெண்ணெயை சிறிது சிறிதாக உள்ளங்கையில் ஊற்றி மடி நீர்க்கோர்வை உள்ள பகுதிகளில் நன்கு அழுத்தி வட்ட வடிவில் தேய்த்து விட வேண்டும்.
பின் குறிப்பு : மடிக்காம்புப் பகுதியில் கொப்புளம் மற்றும் வெடிப்பு கண்ட சமயங்களில் பால் கறவை செய்பவர்கள் மிகவும் கவனமாக கட்டை விரலை நீக்கி காயம் பெரிதாக்காமல் பாலைக் கறக்க வேண்டும்.
தொடர்புக்கு : கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பிரட்ஸ் ரோடு, சேலம் - 636001.
தொகுப்பு : து.ஜெயந்தி, ப.ரவி, மற்றும் நா.ஸ்ரீபாலாஜி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 1 day 6 hours ago |
பொரி உப்புமா![]() 6 days 2 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 18-08-2022.
18 Aug 2022 -
ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு: 30 பேர் பலி - பலர் படுகாயம்
18 Aug 2022காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
-
மனக்கசப்பை தூக்கி எறிந்து அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு
18 Aug 2022சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஈரோடு, கருமுட்டை விற்பனை வழக்கு: நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு
18 Aug 2022ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
-
ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
18 Aug 2022திருவனந்தபுரம்: ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
18 Aug 2022சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்
-
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு அப்பீல்
18 Aug 2022சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
-
உக்ரைன் போரில் சிறைக்கைதிகளை ஈடுபடுத்தும் ரஷ்யா முடிவிற்கு எதிர்ப்பு
18 Aug 2022மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித
-
கொரோனா பேரிடரால் ஜப்பானில் 2 வருடங்களில் 8 ஆயிரம் பேர் தற்கொலை
18 Aug 2022டோக்யோ: கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.
-
ஆர்டர்லி முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்: தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி..க்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு
18 Aug 2022சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு: கனடா செல்லும் சபாநாயகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.
-
பேருந்துகளில் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்
18 Aug 2022சென்னை: முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
18 Aug 2022சென்னை: தமிழக்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள்... வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில்
18 Aug 2022சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
-
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஐந்து பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
18 Aug 2022விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
-
ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐ.நா.வுக்கு வங்கதேச பிரதமர் வலியுறுத்தல்
18 Aug 2022டாக்கா: ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.
-
இங்கிலாந்து, லண்டன் ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து ரெயில் சேவை கடும் பாதிப்பு
18 Aug 2022லண்டன்: இங்கிலாந்து தலைநரக் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
-
தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் கவர்னர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
18 Aug 2022சென்னை: தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தாக தெரிவித்துள்ளார்.
-
வடக்கு அல்ஜீரியாவில் காட்டுத் தீக்கு 26 பேர் பலி 350 குடும்பங்கள் வெளியேற்றம்
18 Aug 2022அல்ஜியர்ஸ்: வடக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக வட ஆப்பிரிக்க உள்துறை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு சட்ட கல்லூரிகளிலும் அம்பேத்கர் படம் ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரை
18 Aug 2022மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என சட்டக்கல்வி இயக்குநருக்கு மதுரை ஐ
-
தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்ட தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார்
18 Aug 2022திருநெல்வேலி: பிரபல தமிழ் அறிஞரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.
-
உலகளவில் குரங்கு அம்மை பாதிப்பு 20 சதவீதம் உயர்வு உலக சுகாதார நிறுவனம் தகவல்
18 Aug 2022ஜெனீவா: உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
63-வது பிறந்தநாள்: நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர்,முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மகாராஷ்டிராவில் பரபரப்பு: ஆளில்லாத படகிலிருந்து ஏகே-47 துப்பாக்கிகள் பறிமுதல்
18 Aug 2022மும்பை: மகாராஷ்டிரத்தில் ஆளில்லா படகிலிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.