எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாக்தாத் : மயில், வேல், பாம்பு, தீபாரதனை, எண்ணெய் விளக்குடன் தமிழர்களைப் போல வழிபாடு நடத்துகின்றனர் ஈராக் யாசிதி இனமக்கள்.
இது குறித்த விரிவான ஆய்வு அவசியமான ஒன்றாகவே இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் ஆதித் தமிழர் நாகரிகமே; இந்திய துணைக் கண்டனத்துக்கு அப்பாலும் ஆதித் தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கான சான்றாக ஈரானில் பிராகுய் எனும் திராவிட மொழி பேசப்பட்டு வருகிறது. ஈரானைத் தாண்டி ஈராக்கில் யாசிதி என்ற இனம் உள்ளது. இவர்கள் தங்களை இந்திய துணைக் கண்டத்துடன் தொடர்புடையவர்களாக கருதுகின்றனர். இஸ்லாமியர்களாக, கிறிஸ்துவர்களை தங்களை இப்போதும் மாற்றிக் கொள்ளாமல் யாசிதி இன மக்கள் தனித்தன்மையுடன் வாழ்கின்றனர். இவர்களின் வழிபாட்டு முறை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
யாசிதிகளின் வழிபாட்டு தலங்கள் கோபுர வடிவில் இருக்கின்றன. இவர்களது பிரதான வழிபாட்டு உருவம் மயிலும் பாம்பும்தான். அத்துடன் தமிழர்களைப் போலவே எண்ணெய் விளக்கு ஏற்றி, தீபாரதனை காட்டி வழிபாடு நடத்துகின்றனர். ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொடூரமாக வேட்டையாடப்பட்டவர்கள் யாசிதிகள்.
அப்போது இந்தியாவின் உதவியை நாடி யாசிதி இனப் பிரதிநிதிகள் இங்கே வருகையும் தந்தனர். தமிழர் வழிபாட்டு முறையை அப்படியே இன்றும் பின்பற்றுகிறவர்களாக யாசிதி இனமக்கள் இருக்கின்றனர். மயில்கள் பொறித்த பானை ஓடுகள் அன்றைய சிந்துசமவெளி சான்றுகளாக இருக்கின்றன.
தமிழகத்தில் குன்றுகள் முருகனின் வழிபாட்டு தலங்களாக இருக்கின்றன. ஈராக்கில் யாசிதி இனமக்களும் குன்றில்தான் தங்களது கோபுர வடிவிலான வழிபாட்டு தலங்களை அமைத்துள்ளனர். யாசிதி இனமக்களுடனான இந்திய துணைக் கண்டத்து உறவும் தமிழர் வழிபாட்டு முறையை பின்பற்றுவதும் ஆய்வுக்குரிய அவசியமான ஒன்றாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


