முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த மனிதருக்கான விஐடி-வீக் எண்ட் லீடர் விருது சென்னை மருத்துவர் திருவேங்கிடத்திற்கு ஜி.வி.செல்வம் வழங்கினார்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      வேலூர்
Image Unavailable

 

2017ம் ஆண்டிற்கான விஐடி மற்றும் வீக்எண்ட் லீடர் அமைப்பின் சிறந்தமனிதருக்கான விருது சென்னையில்நோயாளிகளிடம் குறைந்த கட்டணம்பெற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்கும்மருத்துவர் வி.திருவேங்கிடத்திற்கு விஐடிதுணைத் தலைவர் ஜி.வி.செல்வம்வழங்கினார்.

சிறந்த மனிதர் விருது

 

விஐடியும் லீட் ஸ்டார் பத்திரிகை நடத்தும்வீக் எண்ட் லீடர் என்ற அமைப்பும்இணைந்து ஆண்டு தோறும் சமூகசேவையில் சிறந்து விளங்குபவர்களைதேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கிகௌரவித்து வருகிறது.

அதன்படி 2017ம் ஆண்டின் சிறந்த மனிதர்விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று விஐடியில்நடைபெற்றது. விஐடி டாக்டர் சென்னாரெட்டி அரங்கில் விஐடி வணிகமேலாண்மை பள்ளி ஏற்பாடு செய்திருந்த இந்தநிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை வணிகமேலாண்மை பள்ளி டீன் முனைவர்டி.அசோக் வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம் தலைமை வகித்து 2017ம்ஆண்டின் சிறந்த மனிதருக்கான விஐடி வீக்எண்ட் லீடர் விருது, மற்றும் ரூ.25,000/- ரொக்கப் பரிசினை சென்னையில் குறைந்தகட்டணத்தில் மருத்துவ சிகிச்சையளிக்கும்மருத்துவர் வி.திருவேங்கிடத்திற்கு வழங்கிவாழ்த்தி பேசியதாவது:

குறைந்த கட்டணத்தில் மருத்துவம்

விருது பெற்றுள்ள மருத்துவர்திருவெங்கடம் 66 வயது ஆனவராகஇருந்தாலும் அவருக்கு வயது 16 அவரதுசேவைக்கு வயது 50 ஆக உள்ளது. நாட்டில்வருவாயை எதிர்பார்காமல் சமூக பணியில்ஈடுபட்டள்ளவர்கள் பலர் உள்ளனர்.அவர்களை கௌரவபடுத்துவது சிறந்தபணியாகும். கல்வி முடித்து விட்டு நல்லநிறுவணத்தில் வேலை கிடைத்தவுடன்திருமணம் குழந்தைகள் என்றுஇருந்துவிடாமல் மற்றவர்களுக்கு உதவும்வகையில் சமூக சேவைகளில் ஈடுபடவேண்டும். அந்த சேவை பல்வறு வழிகளில்இருக்க வேண்டும்.

நீங்கள் செல்லும் வழியில் யாராவது சாலைவிபத்தில் சிக்கிக் கொண்டால் அவர்களைகாப்பற்ற வேண்டும் வழக்குகள் வருமேஎன்று தயங்க கூடாது. இப்போது எந்தஇடத்திலும் விபத்தில் சிகிச்சைக்காகசேர்க்கலாம் என்றும் விபத்து சம்மந்தமாகவழக்கு பதிவு செய்யலாம் என்றும்குறிப்பிட்ட இடத்தில் தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை எனவே அதுபற்றி தயங்காமல் உதவ வேண்டும். மத்தியபிரதேச மாநிலத்தில் ஒருவர் மக்களிடம் ரூ. 5, 10 என்று பெற்று செக் டேம் ஒன்றை கட்டிவருகிறார். அது போன்ற சமூக பணிகளைநாம் செய்ய வேண்டும்.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள்மனதில் நிற்பவர் யார் என்ற பாடலுக்கு ஏற்பமக்களின் மனதில் நிற்கும் வகையில் நமதசேவை பணிகள் இருக்க வேண்டும். இன்றுசெய்திதாள்களில் குற்றம் சம்மந்தமானசெய்திகள் தான் அதிகம் வருகின்றன. சமூகசேவையில் ஈடுபவர்களை பற்றியசெய்திகளையும் வெளியிட வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

டாக்டர் திருவேங்கடம் பேச்சு

நிகழ்ச்சியில் சிறந்த மனிதர் விருது பெற்றமருத்துவர் வி.திருவேங்கிடம் ஏற்புரையில்கூறியதாவது:மருத்துவ சிகிச்சைக்காக பணம்இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்றவகையில் எனது பணியை செய்துவருகிறேன் பணம் வாங்காமலேயே சிகிச்சைஅளிக்கிறேன். அப்படி வாங்கினாலும் அதிகபட்சமாக ரூ50 தான் வாங்குவேன் . ஈசிஜிக்குஎன்று அதிக அளவிலான காகிதங்களைபயன் படுத்த தேவையில்லை ஈசிஜி, ரத்தபரிசோதனைகளுக்கு ரூ.10 வசூலிக்கலாம்நான் அதை தான் நோயாளிகளிடம்பெறுகிறேன். வரமுடியாத, நடக்கமுடியாதநோயாளிகளின் வீட்டிற்கே சென்று சிகிச்சைஅளித்து வருகிறேன் இது போன்றபணிகளை மற்றவர்கள் சேவையாக கருதிசெய்யலாம்.மனிதனுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் உடற் பயிற்சி அவசியம், நாள் தோறும் குறைந்தது அரைமணிநேரமாவது நடை பயிற்சி அவசியம்.நடை பயிற்சியின் போது வேகமாக நடக்கவேண்டும் அப்படி செய்தால் உடலுக்கு நல்லது என்றார்.

நிகழ்ச்சியில் வீக் எண்ட் லீடர் புதிய மொபைல் பயன்பாட்டினை துணைத்தலைவர் ஜி.வி.செல்வம்அறிமுகப்படுத்தியதுடன் லீட் ஸ்டார் இதைவெளியிட அதனை மருத்துவர்திருவேங்கடம் பெற்றுக் கொண்டார். இதில்விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந்ஏ.சாமுவேல், லீட் ஸ்டார் இதழ் ஆசிரியர்பி.சி.வினோஜ்குமார், விஐடி வணிகமேலாண்மை பள்ளி ஆலோசர் முனைவர்என்.ஜெயசங்கரன், பேராசிரியர் எம்.ராஜேஸ்ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.முடிவில் பேராசிரியர் ஏ.சிவகுமார் நன்றிகூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து