முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் ஊழியருடன் உறவு : மெக்டொனால்ட்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி நீக்கம்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : பெண் ஊழியருடன் உறவு வைத்திருந்ததாக மெக்டொனால்ட்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அதிரடியாக நீக்கப்பட்டார்.

மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஸ்டீவ் ஈஸ்டர் ப்ரூக் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். பெண் ஊழியர் ஒருவருடன் ஈஸ்டர் ப்ரூக் உறவில் இருந்ததுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

போர்டு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ஈஸ்டர் ப்ரூக் வெளியேறிவிட்டார். இனி நிறுவனத்தின் செயல்பாடு, நிதி குறித்து அவருக்குத் தொடர்பில்லை என மெக்டொனால்ட்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் ப்ரூக்கை நீக்கிய கையோடு அந்தப் பதவிக்கு புதிய நபரையும் அறிவித்து விட்டது மெக்டொனால்ட்ஸ். மெக்டொனால்ட்ஸின் அமெரிக்க கிளைகளுக்கு பொறுப்பாளராக இருந்தவருமான கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி இந்த பதவிக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான ஈஸ்டர் ப்ரூக் பெண் ஊழியருடனான உறவை ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மெயிலில் தனது உறவு நிறுவனத்தின் கொள்கையை மீறும்வகையிலான ஒரு தவறு என்றும், நான் முன்னேற வேண்டிய நேரம் இது. நிறுவனம் எடுத்த முடிவுக்கு உடன்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து