முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தங்களது சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றம் செய்ய விரும்பினால் வரும் 26-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை  அமைச்சர் ஆர். காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 10,19,491 குடும்ப அட்டைகள் சர்க்கரை கார்டுகளாக உள்ளன. இந்த கார்டுகளை  வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய கார்டுகளை அரிசி பெறகூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்திருக்கிறர்கள். அதனை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கீழ்க்கண்ட உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

சர்க்கரைக் குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, இன்று(நேற்று) முதல் 26-ம் தேதி வரை என்ற ( www.tnpds.gov.in ) இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு சர்க்கரை குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து