முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை வெளியாகும் டியூட்

புதன்கிழமை, 15 அக்டோபர் 2025      சினிமா
Dude 2025-10-15

Source: provided

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சி மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர்கள் கலந்து கொண்டு படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி ஷங்கர் பேசுகையில், 8 வயது முதல் 80 வயது வரை எல்லா வயதினரும் இந்த படத்தை பார்த்து கொண்டாடலாம். லவ், எமோஷன், ஆக்சன், செண்டிமெண்ட் என எல்லா விஷயங்களும் இந்த படத்தில் அமைந்துள்ளது.” என்றனர். இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேசுகையில், படத்தில் உங்களுக்கு எல்லோருக்கும் பிடித்த பயங்கர ஹைப்பரான பிரதீப்பையும் பார்ப்பீர்கள். இன்னொரு பக்கம் மெச்சூர்டான, எமோஷனலான இன்னொரு வெர்ஷன் பிரதீப்பையும் பார்ப்பீர்கள். என்னுடைய முதல் படத்திலேயே நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே கொண்டு வர சப்போர்ட் செய்த பிரதீப் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து