முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாகித்ய அகாடமி விருது பெறவுள்ள தமிழ் எழுத்தாளர் கே. வி. ஜெயஸ்ரீ-க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : சாகித்ய அகாடமி விருது பெறவுள்ள தமிழ் எழுத்தாளர் கே. வி. ஜெயஸ்ரீ-க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழ் எழுத்தாளர் கே.வி. ஜெயஸ்ரீ, “நிலம் பூத்து மலர்ந்த நாள்” என்ற மலையாள நாவலை தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கே.வி ஜெயஸ்ரீ, தமிழில் மொழிபெயர்த்த இந்த நாவல், மலையாளத்தில் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பல பல்கலைக் கழகங்களில் பாடமாகவும் இடம் பெற்றிருக்கும் இந்த மலையாள நாவலை தமிழில் சிறந்த முறையில் மொழி பெயர்த்த பெருமைக்குரியவர் கே.வி. ஜெயஸ்ரீ.

சாகித்ய அகாடமி விருது பெறவுள்ள கே. வி. ஜெயஸ்ரீ-க்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மென்மேலும் இதுபோன்ற பல விருதுகளைப் பெற எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து