மேலும் 5,516 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதார துறை அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      தமிழகம்
Radhakrishnan 2020 09 20

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,41,993-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,00,619 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 43,03,043 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 86,752 பேர் பலியாகியுள்ளனர். 10,10,824  பேர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 5,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதார துறை கூறியிருப்பதாவது, 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,86,479 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,206 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8,811-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 996 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மொத்தம் 1,55,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 174 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 64,74,656 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3,26,699 ஆண்கள், 2,15,264 பெண்கள், 30 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து