இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் அட்டவணை அறிவிப்பு

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      விளையாட்டு
India-Australia 2020 10 28

Source: provided

புதுடெல்லி : பி.சி.சி.ஐ. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான அணி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. சுற்றுப்பயணம் ஒரு நாள் போட்டிகளுடன் தொடங்கும். 

மூன்று ஒருநாள் போட்டிகளும் நவம்பர் 27, 29 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் விளையாடப்படும். அதே நேரத்தில், மூன்று 20 ஓவர் போட்டிகளும் டிசம்பர் நான்கு, ஆறு மற்றும் எட்டு ஆகிய தேதிகளில் நடைபெறும். முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்கும். 

முதல் ஒருநாள் - நவம்பர் 27 - சிட்னி 

இரண்டாவது ஒருநாள் போட்டி - 29 நவம்பர் - சிட்னி 

மூன்றாவது ஒருநாள் -02 டிசம்பர் - கான்பெர்ரா 

முதல் 20 ஓவர்போட்டி - 04 டிசம்பர் - கான்பெர்ரா 

இரண்டாவது 20 ஓவர் போட்டி - 06 டிசம்பர் - சிட்னி 

3 வது 20 ஓவர் போட்டி - 08 டிசம்பர் - சிட்னி 

முதல் டெஸ்ட் - 17 டிசம்பர் முதல் 21 டிசம்பர் வரை - அடிலெய்ட் 

இரண்டாவது டெஸ்ட் போட்டி - டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 வரை - மெல்போர்ன் 

மூன்றாவது டெஸ்ட் போட்டி - ஜனவரி 07 முதல் ஜனவரி 11 வரை - சிட்னி 

நான்காவது டெஸ்ட் போட்டி - ஜனவரி 15 முதல் ஜனவரி 19 வரை - பிரிஸ்பேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து