முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கும் : பிரதமர் மோடி திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 4 டிசம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும் என்றும் முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காணொலி மூலமாக பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

தடுப்பூசியின் விலை குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாதுகாப்பான மற்றும் விலை குறைவான தடுப்பூசி இந்தியாவில் நிச்சயம் கிடைக்கும். இந்தியாவில் மொத்தம் 8 தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன.  தடுப்பூசி விநியோகத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் குழுக்கள் இணைந்து செயல்படுகின்றன. தடுப்பூசி விநியோகத்தில் நிபுணத்துவம் மற்றும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.  பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது கட்டணம் சிறந்ததாக உள்ளது. தடுப்பூசி துறையில் எங்களுக்கு மிகப் பெரிய மற்றும் அனுபவம் வாய்ந்த நெட்வொர்க் உள்ளது. அடுத்த சில வாரங்களில் கோவிட் தடுப்பூசி தயாராகி விடும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

விஞ்ஞானிகள் பச்சை சிக்னல் கொடுத்தவுடன், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.  முதலில் முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும். மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை முதலில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  தடுப்பு மருந்து விலை குறைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும்.  நமது விஞ்ஞானிகள் கோவிட் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். மலிவான மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை உலகம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.  உங்கள் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக அனுப்புமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து