சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன் பிறகு கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை உயா்ந்து வந்தது. மேலும், விலை உயரும் என நகை வியாபாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அதற்கேற்ப நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.232 உயா்ந்து, ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ.640 குறைந்து ரூ.38,440-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 1.30 காசுகள் குறைந்து, ரூ.74.07 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.74,070 ஆகவும் இருந்தது.