முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சில் திருப்தி: கே.எஸ். அழகிரி

வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021      அரசியல்
Image Unavailable

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.  இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட குழு, தி.மு.க. பொதுச் செயலாளர் தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகள், வி.சி.க, ம.ம.க எனக் கடந்த முறை மக்கள் நலக் கூட்டணியில் பங்கேற்ற பெரும்பாலான கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. 

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க. தனது முதல் கட்டப் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சியுடன் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் கே.எஸ்.அழகிரி, உம்மன் சாண்டி, கே.ஆர்.ராமசாமி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்றனர். 

தி.மு.க சார்பில் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், வெளியில் வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகத் தெரிவித்தார். 

காங்கிரஸ் தரப்பில் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் டெல்லியில் தலைமையிடம் ஆலோசனை நடத்தி விட்டு சென்னை வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்தியமூர்த்தி பவனில் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கடந்த 2016 தேர்தலில் 41 தொகுதிகளில் நின்றது. இம்முறை 35 தொகுதிகள் கேட்க முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து