முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பத்தலைவிக்கு மாதம் ரூபாய் 1,500 வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 8 மார்ச் 2021      தமிழகம்
Image Unavailable

குடும்பத்தலைவி ஒவ்வொருவருக்கும் மாதம் ரூபாய் 1500 வழங்கப்படும் என்றும் ஒரு குடும்பத்திற்கு, ஆண்டிற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ. 1500 வழங்கப்படும். ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்களை விலையில்லாமல் வழங்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இரண்டு முக்கிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.,

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். எங்களின் திட்டத்திலிருந்து கசிந்த தகவலை தெரிந்து கொண்டு தி.மு.க. உரிமைத்தொகை அறிவித்துள்ளது. ஏற்கனவே நாங்கள் தயாரித்துள்ள தேர்தல் அறிக்கையில் இருந்து கசிந்த தகவலையே மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிருக்கு மாத ஊக்கத் தொகை எனும் திட்டம் எங்கள் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே இடம்பெற்று இருந்தது. 

அரசியலில் இருந்து விலகிய சசிகலா குறித்து என்ன கருத்து தெரிவிக்க முடியும்? சசிகலா அரசியலில் இருந்தால் அது குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்றார். அ.தி.மு.க. - அ.ம.மு.க. இணைப்பு என்பது இல்லவே இல்லை என்றும் தெரிவித்தார். அ.தி.மு.க.வில் இருந்து விலகிச் சென்ற தொண்டர்கள், நிர்வாகிகள் திரும்ப வந்தால் நாங்கள் ஏற்போம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நிறைய திட்டங்களை அ.தி.மு.க அரசு தந்துள்ளது. மக்கள் மனம் மகிழும் வகையில், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இருக்கும். குடும்பத்திற்கு மாதம் தோறும் ரூ.1,500 வழங்கப்படும் எனவும் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என மகளிர் தினத்தை ஒட்டி அ.தி.மு.க தேர்தல் வாக்குறுதியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 

முதல்வரின் மேற்கண்ட அறிவிப்புகள் குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. அதிலும் மக்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து