முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்த நித்யானந்தா

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

பெங்களூரில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தாவை பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக அகமதாபாத் போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார். அதன்பிறகு நித்யானந்தா யூடியூப் சேனலில் தோன்றி வீடியோவில் பேசினார். ஒரு புதிய இறையாண்மை தேசத்தை உருவாக்கி இருப்பதாகவும், அதற்கு கைலாசா என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறினார். 

அதன்பிறகு அடுத்தடுத்து பல்வேறு வீடியோக்களை போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கைலாசா நாட்டுக்கென்று தங்க நாணயங்களையும் வெளியிட்டார். பழைய கால இந்திய நாணயங்களை போல காலணா, எட்டணா தொடங்கி பத்து பைசா வரை 5 வகையான நாணயங்களை அறிமுகம் செய்தார்.

மன்னர் காலத்தில் இருந்தது போன்ற பொற்காசுகளை வெளியிட்டார். மேலும் கைலாசா நாட்டுக்கென புதிய கல்வி கொள்கை, பணக்கொள்கை, ரிசர்வ் வங்கி என அனைத்து அறிவிப்புகளையும் வெளியிட்டார். இந்த நிலையில், நித்யானந்தா அவ்வப்போது ஏதாவது ஒரு கடவுளை போல வேடம் அணிந்து புகைப்படம் எடுத்து இணைய தளத்தில் பதிவிட்டு வந்தார். ஏற்கனவே சிவனாகவும், கால பைரவராகவும் நித்யானந்தா வேடமிட்டு இணைய தளத்தில் பகிர்ந்தார்.

இந்த நிலையில் அவர் திருப்பதி ஏழுமலையான் போல வேடம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அந்த புகைப்படங்களை இப்போது இணைய தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் தங்கம், வைரம் ஜொலி ஜொலிக்க ஏழுமலையான் போல வேடமணிந்து காணப்படுகிறார். அதில் ஒரு கருத்தையும் பதிவிட்டுள்ளார். ‘பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமான ஆசீர்வாதங்களையும், அருளையும் பெற்று உங்கள் நிதி நெருக்கடிகளில் இருந்து வெளியே வாருங்கள். செல்வம் ஏராளமாக பெருகும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து