முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருடிய கொரோனா தடுப்பூசிகளை காவல் நிலையம் அருகே வைத்து சென்ற திருடன்

வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

தான் திருடியது கொரோனா தடுப்பூசிகள் என்று தெரிந்தவுடன் திருடன் அவற்றை போலீஸ் நிலையம் அருகே வைத்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருத்துகள் மருத்துவமனைகளில் இருந்து திருடப்பட்டு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிகழ்வுகளில் அரங்கேறி வருகிறது. 

அந்த வகையில், அரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,710 கொரோனா தடுப்பூசி டோஸ்களை திருடன் ஒருவன் நேற்று முன்தினம் திருடி சென்றான். சேமிப்பு கிடங்கின் கதவை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 1,270 கோவிஷீல்டு மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களை திருடி சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தான் திருடிய கொரோனா தடுப்பூசிகளை திருடனே ஜிண்ட் மாவட்ட போலீஸ் நிலையம் அருகே வைத்து சென்றுள்ளார். போலீஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு நேற்று முன்தினம் மாலை சென்ற அந்த திருடன் டீக்கடைக்காரரிடம் ஒரு பையை கொடுத்துள்ளார். மேலும், தான் போலீசாருக்கு உணவு டெலிவெரி செய்து வருவதாகவும்,வேறு இடத்திற்கு விரைவாக செல்ல இருப்பதால் இதை போலீசாரிடம் கொடுத்து விடும்படியும் அந்த பையை டீக்கடையில் வைத்து விட்டு சென்றார்.  இது குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக டீக்கடைக்கு சென்று டீக்கடைக்காரரிடம் திருடன் கொடுத்த பையை சோதித்ததில் அது தடுப்பூசி என தெரியவந்தது.  இதை தொடர்ந்து திருடனை போலீசார் தேடி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து