எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க இன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்தும் ஆலையை மீண்டும் திறக்கக் கோரியும் வேதாந்தா நிறுவனம் சார்பில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் தினமும் 1,050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரு உற்பத்தி கூடங்கள் உள்ளன. எனவே ஆலையை திறக்க அனுமதி வழங்கினால் ஆக்சிஜனை தயாரித்து இலவசமாக வழங்குவோம் என்று வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 23-ம் தேதி நடைபெற்ற போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில் நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் அனுமதி தரலாம் என கூறியது
ஆனால், இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் இடைக்கால மனு வெள்ளிக்கிழமையன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பாப்டே, ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஏன் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் உள்ளது. ஒரு மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூட மிகவும் முக்கியம் என நீதிபதி தெரிவித்தார். மேலும், ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான விரிவான பிரமான பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் வழக்கை வரும் 26-ம் தேதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையில் நடந்தது. அதில் பொதுமக்கள், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட குழுவினர், அரசியல் கட்சியினர் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க போராட்ட குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க இன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை 9:15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையின்போது தமிழகம் சார்பில் முன் வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து ஆலோசிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
25 Feb 2026சென்னை, முதுபெரும் அரசியல் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் நேற்று காலமானார்.
-
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
25 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார்.
-
குமரியில் ரூ. 30 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
25 Feb 2026கன்னியாகுமரியில் மினி டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
-
என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன்: தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்: நாகர்கோவில் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
25 Feb 2026நாகர்கோவில், என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இ
-
தனக்கென வாழாமல் பிறர்காகவே வாழ்ந்தவர்: நல்லகண்ணுவுக்கு இ.பி.எஸ். இரங்கல்
25 Feb 2026சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு மறைவுக்கு அ.தி.மு.க.
-
யாருடன் கூட்டணி என்பது குறித்து ராமதாஸ் இன்று முக்கிய முடிவு
25 Feb 2026திண்டிவனம், பா.ம.க. கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று முடிவு செய்கிறார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
25 Feb 2026கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர்: நல்லகண்ணுவுக்கு விஜய் புகழஞ்சலி
25 Feb 2026சென்னை, மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர் நல்லகண்ணு என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ராமதாஸ் தொடர்ந்த வழக்கு: அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
25 Feb 2026சென்னை, ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு சார்பில் விழா: ரூ. 858.92 கோடியில் நலத்திட்ட உதவிகள்: 3,12,082 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
25 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ச
-
தமிழக காவல் துறைக்கு ரூ.124 கோடியில் புதிய மென்பொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
25 Feb 2026சென்னை, தமிழக போலீஸ் துறைக்கு ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
-
அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கும் தமிழக அரசு
25 Feb 2026சென்னை, அதானி நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு மின்சாரம் வாங்கியது.
-
இலவச வாக்குறுதிகளை தடைசெய்ய கோரி வழக்கு: தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவிப்பு
25 Feb 2026புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அவச
-
போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாக்., பிரதமர் ஷெரீப் இறந்திருப்பார்: அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு
25 Feb 2026நியூயார்க், போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டு
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
25 Feb 2026- ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவாரம்பம்.
- கோவை கோணியம்மந் கிளி வாகனம்.
- திருச்செந்தூர் முருகன் கோ ரதம், இரவு சுவாமி வெள்ளி சப்பரம். அம்பாள் இந்திர வாகனம்.
-
இன்றைய நாள் எப்படி?
25 Feb 2026


